AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?

Shah Rukh Khan Exit From Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இதிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?
ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Apr 2026 17:02 PM IST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் லீட் கதநாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழி நடிகர்களும் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாம். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

இதில் நடிகர் ஷாருக்கான் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திலிருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்தும், ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) பதிலாக ஜெயிலர் 2 படத்தில் எந்த நடிகர் நடித்துள்ளார் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: LIK படத்தின் வரவேற்பு.. திரையரங்கில் எமோஷனலான பிரதீப் ரங்கநாதன் – வீடியோ இதோ!

ஜெயிலர் 2 படத்திலிருந்து ஷாருக்கான் வெளியேறிய காரணம்:

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது அவர் விலகிய நிலையில், அவரின் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இப்படத்தில் நடித்துள்ளாராம். மேலும் ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய காரணம் குறித்து ரஜினிகாந்துடன் தொடர்புகொண்டு பேசியுள்ளாராம்.

இதையும் படிங்க: நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்

அவர் ரஜினிகாந்திடம், தனது நடிப்பில் வரவிருக்கும் கிங் படத்திற்காக அதே போலீஸ் தோற்றத்தில் நடிப்பதாகவும், அதனால் ரசிகர்கள்களை தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக மற்றும் இப்படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறியுள்ளார். மேலு இனிவரும் படங்களில் ஏதேனும் சிறப்பு தோற்றங்கள் இருந்தால் நடிக்க அழைக்குமாறு அவர் ரஜினியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்திலிருந்து ஷாருக்கான் விலகியது குறித்து வைரலாகும் பதிவு:

தற்போது இந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்த 2026 ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை கூடிய விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us