AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LIK படத்தின் வரவேற்பு.. திரையரங்கில் எமோஷனலான பிரதீப் ரங்கநாதன் – வீடியோ இதோ!

Pradeep Ranganathan Emotional: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது இன்று (10/04/2026) வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் ரசிகர்களுடன் இப்படத்தை திரையரங்கில் பார்த்த பிரதீப் ரங்கநாதன், எமோஷனல் வீடியோ இணையத்தில் வைரல்.

LIK படத்தின் வரவேற்பு.. திரையரங்கில் எமோஷனலான பிரதீப் ரங்கநாதன் – வீடியோ இதோ!
பிரதீப் ரங்கநாதன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Apr 2026 16:11 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன்(Pradeep Ranganathan) நடிப்பு மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டும், எமோஷனல் கதையில் தயாராகியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்த இந்த படமானது இன்று 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா (Sj Suryah), யோகி பாபு (Yogi Babu), ஆனந்த ராஜ், மற்றும் சீமான் (Seeman) போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தை ரசிகர்களுடன் சென்னையில் உள்ள திரையரங்கில் பார்த்த பிரதீப் ரங்கநாதன் கண்ணீர்விட்டு எமோஷனலான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் திரைப்பட இணையத்தில் லீக்.. விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபலங்கள்!

LIK திரைப்படத்தை பார்த்து திரையரங்கில் எமோஷனலான பிரதீப் ரங்கநாதன் வீடியோ பதிவு:

இந்த வீடியோவில், திரையரங்கில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை பாடத்தை பிரதீப் ரங்கநாதன், எமோஷனலாகி கண்ணீர்விட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தை கட்டியணைத்து குறித்து உள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதன், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவையும் கட்டியணைத்து தனது எமோஷனலை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்

பிரதீப் ரங்கநாதனின் இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இதுவரை வெளியான 3 படங்களும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 4வது படமாக இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகியுள்ள நிலையில், இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனுக்கு 4வது வெற்றி திரைப்படமாக இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வெற்றிப்படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us