AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: ஜன நாயகன் திரைப்பட இணையத்தில் லீக்.. விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபலங்கள்!

Jana Nayagan Movie Leak: தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் முழுவதுமாக இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ள நிலையில், நிலையில், அதற்கு படக்குழு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு ஆதரவு குரல் கொடுத்தும் மற்றும் இப்படத்தை இணையத்தில் யாரும் பகிரவேண்டாம் என தமிழ் பிரபலங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

Jana Nayagan: ஜன நாயகன் திரைப்பட இணையத்தில் லீக்.. விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த பிரபலங்கள்!
ஜன நாயகன் படத்திற்காக குரல் கொடுத்த பிரபலங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Apr 2026 14:58 PM IST

கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி காத்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) உச்ச நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், இன்னும் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிக்கவில்லை. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து சில காட்சிகள் லீக் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி நிலவிய நிலையில், தற்போது இப்படமானது முழுவதுமாக இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழு கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருந்த நிலையிலும், எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டுவருகிறது.

அந்த வகையில் ஜன நாயகனை படத்தை பகிர்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் லீக் பிரச்சனைக்கு, ஆதரவு குரல் கொடுத்து சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), சாந்தனு (Shanthnu), விஜய் ஆண்டனி (Vijay Antony), ஜி.வி. பிரகாஷ் குமார், மற்றும் சிபி சத்யராஜ் (Sibi Sathyaraj) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகன் பட வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடிவடிக்கை பாயும் – படக்குழு எச்சரிக்கை

ஜன நாயகன் திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் சிவகார்த்திகேயன், ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுப் பிரதி காட்சிகளாக பார்ப்பதை தவிர்க்கவேண்டும். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கேயே பார்க்கவும். ஜன நாயகன் படத்தை லீக் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படம் குறித்து சாந்தனு வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில் நடிகர் சாந்தனு, ஒருவரின் கனவு இணையத்தில் ரத்தமாக சிந்துகிறது. தயவு செய்து கடினமான உழைப்பை பகிரப்பட்ட வீடியோவாக மாற்றவிடாதீர்கள். திரைப்படம் திரையில் உயிர்பெறட்டும், போனில் மரித்துவிடவேண்டாம் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாயகனாக களமிறங்கும் தனுஷின் மூத்த மகன்… ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு:

இந்த பாதியில் விஜய் ஆண்டனி, ஜன நாயகன் படம் இப்படி ஒரு லீக் வீடியோவால் பாதிக்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. படம் வெளியாகும்போது அனைவரும் சட்டபூர்வமாக பார்க்கவேண்டும் என நான் வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து தமிழில் நடிகர்கள் பலரும் ஜன நாயகன் படத்தின் காட்சிகள் கசிந்ததற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர்.

Follow Us