Pooja Hegde: விஜய் சாரை கடைசி முறையாக கொண்டாட வேண்டாமா? திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் – நடிகை பூஜா ஹெக்டே கண்டனம்!
Pooja Hegde About Jana Nayagan Movie Leak: பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் பூஜா ஹெக்டே. இவர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுவதும் இணையத்தில் லீக்காகியுள்ள நிலையில், திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என அவர் பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) உச்ச நாயகனாக நடித்திருக்கும் நிலையில், தமிழ் இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 500 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் தயாராகியுள்ள நிலையில், கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இதன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்னும் சென்சார் பிரச்சனை முடியாத நிலையில், படத்தின் புது ரிலீஸ் தேதியும் உறுதிசெய்யப்படவில்லை.
அந்த வகையில் சமீபத்தில் இப்படமானது முழுவதுமாக இணையத்தில் கசிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்துவந்த நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டேவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகனுகாக குரல் கொடுக்கும் கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள்
ஜன நாயகன் திரைப்படத்தின் லீக் குறித்து நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#JanaNayagan pic.twitter.com/GWw0mKu3fz
— Pooja Hegde (@hegdepooja) April 11, 2026
இந்த பதிவில் நடிகை பூஜா ஹெக்டே, “நமது ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மட்டுமல்ல, இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. இது வெறும் வசூல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. இப்படத்தில் பணியாற்றியிருக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் மரியாதையை பற்றியதாகும். அதுமட்டுமில்லாமல், விஜய் சாரை கடைசியாக ஒருமுறை, ஒரு திருவிழாவைப்போலவே அனைவரும் ஒன்றாக கூடி, பெரிய திரையில் கொண்டாடி மகிழவேண்டாமா?. திருட்டுத்தனமாக படத்தை பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம். அப்போதுதான் சினிமாவும், கலையும் வளரும்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை கயடு லோஹரின் பர்த்டே ஸ்பெஷல்… தொடர்ந்து வெளியாகும் வீடியோ மற்றும் போஸ்டர்ஸ்
தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் கமல்ஹாசன், சூர்யா முதல் ரஜினிகாந்த் வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களும் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தளபதி விஜய் இன்னும் இப்படம் குறித்து எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஜன நாயகன் பட இணையத்தில் கசிந்தது குறித்து நடிகர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது. தற்போது ஜன நாயகன் படத்தின் லீக் வழக்கு சைபர் கிரைம் கைக்கு சென்றுள்ளது. அந்த விதத்தில் இதன் விசாரணையும் தொடங்கியுள்ளதாம்.