ஜன நாயகனுகாக குரல் கொடுக்கும் கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள்
Jana Nayagan Movie Piracy Issue: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்ட நிலையில் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் திரையுலக பிரபலங்கள் ஆதரவு கரங்கள் நீட்டுகின்றனர்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி ப்ட்டுமொத்த பான் இந்திய சினிமாவும் தற்போது அதிர்ச்சியில் உள்ளது. பல கோடிகள் பட்ஜெட்டில் தயாரான படம் ஜன நாயகன். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, சுனில், நாசர், நிழல்கள் ரவி, பாபா பாஸ்கர், மோகின்கா ப்ளெசி, ரெபா மோனிகா ஜான் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடர்த்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. தொடர்ந்து சென்சார் பிரச்சனைகள் சென்றுகொண்டு இருக்கும் நிலையில் ஜன நாயகன் படம் முழுவதும் இணையத்தில் கசிந்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.




கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள் வரை – ஜன நாயகனுக்கு ஆதரவு குரல்:
ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு ஆதரகாவும் அந்த செயலை எதிர்த்து பிரபலங்கள் பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் சூர்யா முதல் பான் இந்திய நட்சத்திரங்கள் என பலர் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன் இந்த மாதிரியான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read… நாயகனாக களமிறங்கும் தனுஷின் மூத்த மகன்… ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
கமல் ஹாசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The leak of #Jananayagan is not an accident – it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is…— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2026
Also Read… ரேசிங்கில் பிசியாக இருக்கும் அஜித் எப்போது மீண்டும் நடிக்க வருவார் – எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு