AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேசிங்கில் பிசியாக இருக்கும் அஜித் எப்போது மீண்டும் நடிக்க வருவார் – எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு

SJ Suryah Talks About Ajith Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்காள இருக்கும் பலரின் முதல் படம் அஜித் குமாரை வைத்து எடுக்கப்பட்டதாக இருக்கும். அந்த வரிசையில் உள்ள எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அஜித் குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரேசிங்கில் பிசியாக இருக்கும் அஜித் எப்போது மீண்டும் நடிக்க வருவார் – எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு
அஜித் குமார் மற்றும் எஸ்.ஜே.சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Apr 2026 11:20 AM IST

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தனது ரேசிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து முழு நேரமும் ரேசிங்கில் பிசியாக இருக்கும் அஜித் குமார் தொடர்ந்து பல நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்று தமிழகத்திற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இப்படி பிசியாக ரேசிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் அடுத்ததாக எப்போது படங்களில் நட்டிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டிற்காகவும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் அடுத்ததாக தனது 64-வது படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடனே மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். இவர் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் அஜித் குமார் குறித்து எஸ்.ஜே.சூர்யாவின் கலகல பேச்சு:

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படத்தின் வாய்ப்பை கொடுத்தது அஜித் குமார் என்பதை அவர்களே பல இடங்களில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் உள்ள எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இயக்குநராக முதல் பட வாய்ப்பை கொடுத்தவர் அஜித் குமார் தான். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உங்களது நெருங்கிய நண்பர் அஜித் குமார் ரேஸிங்கில் இருந்து எப்போது மீண்டும் நடிக்க வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா அவர் எதை திட்டமிட்டாலும், அதில் உறுதியாக நிற்பார். அவருடைய திட்டங்கள் எப்போதும் சரியானவையாக இருக்கும் என்றும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்

இணையத்தில் வைரலாகும் எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு:

Also Read… AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Follow Us