AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி

Karuppu Movie New Single Update: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் அடுத்ததாக மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்டை தெரிவித்து உள்ளார்.

கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
கருப்பு Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Apr 2026 12:47 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து உள்ளது அவர்களின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நட்டி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024-ம் ஆண்டே தொடங்கி நடைப்பெற்று வந்தது. 2025-ம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2026-ம் ஆண்டு இறுதியாக வெளியாகிறது.

அதன்படி படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் நேற்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விழாவில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது, ‘கருப்பு’ திரைப்படத்தின் அடுத்த பாடல், தமிழ் புத்தாண்டுக்குள் வெளியிடப்படும். இப்படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது. இதன் இறுதி வடிவத்தைக் கண்ட தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த கோடைக்காலத்தில் இப்படம் உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்விக்கும். இது மே 14-ஆம் தேதி வெளியாகிறது என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!

Follow Us