AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா!

Actress Malavika talks about Love Insurance Kompany movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நிலையில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா!
நடிகை மாளவிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Apr 2026 23:01 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் உன்னைத் தேடி. இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மாளவிகா நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து நாயகி வேடத்தில் நடித்து வந்த நடிகை மாளவிகா பிறகு கவர்ச்சியை மையமாக வைத்து உள்ள கதாப்பாத்திரங்களில் அதிக அளவில் நடித்து வந்தார். அதன் பிறகு அவர் பெரும்பாலும் அப்படியான கதாபபத்திரங்களிலேயே நடித்து வந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வந்தார். இதில் அதிக்கப்படியாக தமிழ் மொழியில் படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து 2009-ம் ஆண்டு வரை பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தனது சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. அதன்படி அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது:

அதன்படி இன்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை மாளவிகா கூறியதாவது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன்; ஆனால், முதன்முறையாக இந்தப் படத்தில்தான் என் சொந்தக் குரலில் நானே பின்னணி பேசியிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த விக்னேஷ் சிவனுக்கு என் நன்றிகள். பிரதீப் ரங்கநாதன் மிகச் சிறந்த ஒரு நடிகர். பொறுமையே இந்தப் படம் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்; பல போராட்டங்களுக்குப் பின்னரே இப்படம் உருவாகி வெளிவந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ‘வாழை மீன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… Prabhu Deva: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!

இணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் பேச்சு:

Also Read… இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!

Follow Us