AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரசாந்த் கூட அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை – மனம் திறந்த தேவயானி

Actress Devayani talks about her daughter launched actress under Prashanth Production: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவரது மகள் தற்போது நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளது குறித்து அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

பிரசாந்த் கூட அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை – மனம் திறந்த தேவயானி
தேவயானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Apr 2026 16:29 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அப்பு. இந்தப் படத்தினை இயக்குநர் வசந்த் எழுதி இயக்கி இருந்தார். நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை தேவயானி நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் வெளியாகி 26 ஆண்டுகளைக் கடந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியான காலக்கட்டத்தில் எல்லாம் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல நடிகை தேவயானியும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தேவயானி அப்பு படத்தில் பிரசாந்த் உடன் நடித்தது மற்றும் தற்போதைய நிலையை ஒப்பிட்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகை தேவயானி கெரியரின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இனியா குமாரன் மற்றும் பிரியங்கா குமாரன் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா இசைத் துறையை தேர்வு செய்து அதில் வலம் வருகிறார். இந்த நிலையில் இளைய மகள் பிரியங்கா நடிகர் பிரசாந்த் தயாரித்து நடிக்கும் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார். இது குறித்து தேவயானி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை:

‘ரஞ்சன்’ திரைப்படத்தின் மூலம் என் மகள் பிரியங்காவை அறிமுகப்படுத்திய திரு. தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவள் நிச்சயமாகச் சிறப்பாக நடித்து, திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருப்பாள். நான் ‘அப்பு’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ​​என் மகள் பிரசாந்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பார் என்று நான் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று தேவயானி தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரசாந்த் தயாரித்து நடிக்கும் இந்த ரஞ்சன் படம் தெலுங்கு சினிமவில் நடிகர் நானியின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற கோர்ட் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நிச்சயமாக தமிழ் ரீமேக்கிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Nooru Saami: எமோஷனல் பேமிலி கதையில்.. விஜய் ஆண்டனி – ஸ்வாசிகவின் நூறு சாமி பட டீசர் இதோ!

இணையத்தில் வைரலகும் நடிகை தேவயானி பேச்சு:

Also Read… அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் – நடிகை வாணி போஜன்

Follow Us