Rajinikanth: 2026 தேர்தல் குறித்த கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!
Rajinikanth About 2026 Election: பான் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கேட்டால் அனைவரும் கூறும் ஒரே நபர் ரஜினிகாந்த். இவர் தற்போது சினிமாவில் படங்களில் பிசியாக நடித்துவருகிறார். அந்த விடத்த்தில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் பேசிய ரஜினிகாந்த், 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தில் இவரின் காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்ததாக ரஜினிகாந்த், தலைவர் 173 (Thalaivar 173) படத்தில் நடிக்கவுள்ளார். இதை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அதில் ஜெயிலர் 2, KHXRK மற்றும் 2026 தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யும் கருப்பு படக்குழு – வைரலாகும் தகவல்
செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசிய விஷயம் :
செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், “ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், விரைவில் முடிவடைந்துவிடும் என கூறினார். பின் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் எனவும் கூறினார். பின் ரஜினிகாந்திடம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு கையெடுத்து கும்பிட்டவாறு, ஹா ஹா வணக்கம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் – TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா
மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்வீர்களா? என கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு நோ கமெண்ட்ஸ் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் KHXRK திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அதில் தெரிவித்திருந்தார் என்பது குடிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் படம் குறித்த எக்ஸ் பதிவு:
Born Cool. Built Retro. Eternal Swag. 😎#KHxRK Tamil Promo
▶️ https://t.co/9rRSNvssoJ@ikamalhaasan @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @DirRajivMenon @Nirmalcuts @KiranDrk #PallaviSingh @amritharam2 @valentino_suren @alagiakoothan @MShenbagamoort3 @arjundurai… pic.twitter.com/qlUHR3FYrC
— Red Giant Movies (@RedGiantMovies_) February 21, 2026
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறதாம்.