அந்த ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன் – செல்வராகவன் ஓபன் டாக்
Director And Actor Selvaraghavan Talks About Smoking Habit: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னிடம் உள்ள பழக்கத்தில் எதனை கைவிட வேண்டும் என்று பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் செல்வராகவன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் செல்வராகவன் தற்போது இரண்டு படங்களை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இவரது நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் பிசியாக இருக்கிறார் செல்வராகவன். தொடர்ந்து இவரது படங்கள் தொடர்பான செய்தி மக்களிடையே வைரலாகி வருவது போல தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்க்கை குறித்தும் மனிதர்கள் மற்றும் உறவுகள் குறித்து செல்வராகவன் வெளியிடும் செய்திகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. நட்பு, காதல், துரோகம், பிரிவு என செல்வராகவன் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வரும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது மட்டும் இன்றி அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் தற்போது கதையின் நாயகனாக நடித்து உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அந்த ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன்:
நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் ஒரே ஒரு பழக்கம் எது என்று செல்வராகவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புகைப்பிடித்தல், என்று செல்வராகவன் பதிலளித்தார். “நான் இதைச் சொன்னால், ஒருவேளை யாராவது அதைக் கேட்டுத் திருந்தக்கூடும்; அதனால்தான் நான் இதை வெளிப்படையாகப் பேசுகிறேன். இது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. 100 சதவீதம் இதைச் செய்யாதீர்கள். நான் இந்தப் பழக்கத்தை விட்டுவிடப் பலமுறை முயன்றேன், ஆனால் என்னால் முடியவில்லை; இருப்பினும், அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக அதைக் கைவிட்டுவிடுவேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஒருபோதும் புகைப்பிடிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.
Also read… விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் செல்வராகவன் பேச்சு:
Q: Which was the one habit which you want to change ❓#Selvaraghavan: Smoking 🚭. If I tell some might listen, that’s why I’m opening it up, it’s very dangerous for health. 100% don’t do it. I have tried many times to quit it, but I’m not able to, but if there is a chance I… pic.twitter.com/I65O3FefDW
— AmuthaBharathi (@CinemaWithAB) April 3, 2026
Also read… ஆட்சியும் மாறும்… காட்சியும் மாறும்… TN 2026 படத்தின் டீசர் இதோ!