AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் – நடிகை வாணி போஜன்

Actress Vani Bhojan talks about rejected Bachelor movie : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் – நடிகை வாணி போஜன்
வாணி போஜன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Apr 2026 18:54 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை வாணி போஜன். இவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் ரசிகர்களிடையே பிரபலம் ஆவதற்கு முன்னதாகவே சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து தமிழக மக்களிடையே பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வெள்ளித்திரையில் அவர் நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடர்ந்து. தொடர்ந்து சினிமாவில் இரண்டாம் நாயகியாக நடித்து வந்த நடிகை வாணி போஜன் நாயகியாகவும் நடித்து வருகிறார் தற்போது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் படங்கள் வெளியாகி வருகின்றது. மேலும் இணையதள தொடர்களில் நடிப்பதிலும் அதிக அளவில் நடிகை வாணி போஜன் கவனம் செலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வாணி போஜன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான ஓ மை கடவுளே, மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை மற்றும் கேங்கர்ஸ் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டியில் தான் ரிஜெக்ட் செய்த படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன்:

அதன்படி நடிகை வாணி போஜன் பேசியதாவது தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் திவ்ய பாரதி இருவரும் இணைந்து நடித்த பேச்சுளர் படத்தில் நடிப்பதற்கு நோ சொன்னதாக தெரிவித்துள்ளார். இயக்குநர் சதிஷ் செல்வகுமார் பேச்சுளர் படத்திற்காக தன்னை அனுகி பேசிய போது அந்தப் படத்தில் நடித்தால் தப்பாகிடுமோ என்று நினைத்து அதற்கு நோ சொல்லியதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் வாணி போஜன் பேச்சு:

Also Read… LIK: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us