AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் 55-வது படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா? வைரலாகும் தகவல்

Actor Dhanush's 55th Movie Release Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது 55-அது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்க்கலாம்.

தனுஷின் 55-வது படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா? வைரலாகும் தகவல்
தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Apr 2026 10:37 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் வரை தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மற்ற நடிகர்களின் படங்கள் வருடத்திற்கு ஒன்று தான் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் நடிகர் தனுஷின் படங்கள் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படமாவது திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் குறைந்தது இரண்டு படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு தனுஷின் நடிப்பில் உருவாகி உள்ள கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் 55-வது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தீபாவளியை குறிவைக்கும் தனுஷின் 55-வது படம்:

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்ற 2026-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது டீசர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்

Follow Us