AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் கர படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Kara Month Begins: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் புதிதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளனர்.

தனுஷின் கர படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Apr 2026 18:10 PM IST

தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இதுவரை 53 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன போது பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். அதனை அனைத்தையும் தனது வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ்.

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறையாவது அவர்களுக்கு பிடித்த நாயகன்களின் படங்கள் வெளியாகுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு அந்த கவலையே இல்லை. அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த மாத இறுதியில் கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தனுஷின் கர படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:

அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் தான் கர. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியக உள்ளது. இந்த நிலையில் கர மந்த் பிகின்ஸ் என்று படக்குழு இன்று ஒரு போஸ்டரை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது நாங்க நாளு பேரு பாடல் – வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏப்ரலில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்

Follow Us