கோடிக்கணக்கான மக்களுக்கு ராமர் ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறார் – ரன்பீர் கபூர்
Actor Ranbir Kapoor Recent Interview: ராமாயணா கதையை மையமாக வைத்து இந்திய சினிமாவில் பலப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக ராமாயணா கதையை மையமாக வைத்து ராமராக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து மக்களால் கொண்டாடப்படும் கடவுளாக வலம் வருகிறார் ராமர். இவரது வரலாறு என்ற ராமாயணத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ரமாயண கதையை சீரியல்களாகவும், இணையதள தொடராகவும், படங்களாகவும் பலமுறை இந்திய சினிமாவில் உருவாக்கி உள்ளனர். அதன்படி அடுத்ததாக இந்திய சினிமாவில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து திரையரங்குகளில் வெளியான உள்ள படம் ராமாயணா. இந்தப் படத்தை இயகுநர் நிதீஷ் திவாரி இயக்கி வரும் நிலையில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதன்படி நடிகர்கள் ரவி துபே, சாய் பல்லவி, சன்னி தியோல், யாஷ், அமிதாப் பச்சன், லாரா தத்தா, அருண் கோவில், இந்திரா கிருஷ்ணன், குணால் கபூர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய், ஆதிநாத் கோத்தாரே, ஷீபா சத்தா, ஷிஷிர் சர்மா, அஜிங்க்யா தேயோ என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி முதல் பாகம் வெளியாக உள்ளது. மேலும் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




மக்களுக்கு ராமர் ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறார்:
தலைமுறை தலைமுறையாக கோடிக்கணக்கான மக்களுக்கு ராமர் ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார், மேலும் அவரது மரபு நமக்குப் பிறகும் நீண்ட காலம் தொடரும். அவர், துன்பங்களுக்கு எதிரான மனித ஆன்மாவின் வெற்றியைக் குறிக்கிறார். அவர் கருணை, தைரியம், நீதி மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார். அதனால்தான் அவர், ஒரு சிறந்த மனிதனின் உருவகமாகிய மரியாதா புருஷோத்தம் என்று அழைக்கப்படுகிறார் என்று ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அஜித் குமாரின் அந்த ஹிட் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க இருந்தது – இயக்குநர் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் ரன்பீர் கபூர் பேச்சு:
#RanbirKapoor about #LordRam:
– Lord Ram has been a guiding force for billions across generations, and his legacy will continue long after us. He represents the victory of the human spirit over adversity. He stands for compassion, courage, righteousness, and forgiveness. That’s… pic.twitter.com/4nYJNTsEG1
— Movie Tamil (@_MovieTamil) March 31, 2026
Also Read… பிரபல நடிகை ஜனனிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்!