AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

Love Insurance Kompany Pre-Release Event Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் உருவாகு நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் தற்போது வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Apr 2026 12:08 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் வரலட்சுமி சரத்குமார் இந்தப் படத்தின் மூலமாக நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தாலும் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும் விக்னேஷ் சிவன் மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான தானா சேர்ந்த கூட்டம், நானும் ரௌடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து உள்ளார். படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் வருகின்ற 06-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு வேல் டெக் யூனிவர்சிட்டியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… Kavin: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Durai Senthilkumar: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு – அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!

Follow Us