AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Krithi Shetty: சீமான் சாருடன் பேசி எனது தமிழ் வளம் வளர்ந்தது – கிரித்தி ஷெட்டி பேச்சு!

Krithi Shetty About Seeman: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் கிரித்தி ஷெட்டி. இவர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சீமானுடன் பணியாற்றியது குறித்து மனம் திறந்துள்ளார்.

Krithi Shetty: சீமான் சாருடன் பேசி எனது தமிழ் வளம் வளர்ந்தது – கிரித்தி ஷெட்டி பேச்சு!
கிரித்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் சீமான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Apr 2026 15:51 PM IST

இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் கிரித்தி ஷெட்டி (Krithi Shetty). இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வா வாத்தியார் (Vaa Vaathiyaar) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கார்த்தியுடன் (Karthi) ஜோடியாக நடித்திருந்த நிலையில், தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்திருந்தது. இந்த படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு முன்னே கிரித்தி ஷெட்டி அறிமுகமான படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இதில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN) இயக்கியுள்ளார்.

இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், நடிகை கிரித்தி ஷெட்டி பேசியுள்ளார். அதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில், நடிகரும் அரசியல்கட்சி தலைவருமான சீமானுடன் (Seeman) பணியாற்றியது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் – TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா

LIK படத்தில் சீமானுடன் பணியாற்றியது குறித்து கிரித்தி ஷெட்டி பேச்சு:

அந்த நேர்காணலில் நடிகை கிரித்தி ஷெட்டி பேசுகையில், “சீமான் சார் , LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்திருக்கிறார். அவரை நான் சந்தித்திருகிறேன், நான் அவரிடம் அதிகம் சொல்லியிருக்கிறேன், உங்களிடம் பேசி, எனது தமிழ் பேச்சு மேலும் நன்றாக வளர்கிறது என சொன்னேன். அவர் சாதாரணமாகவே மிகவும் இலக்கணமாக தமிழ் பேசுவார். ஒரு செல்பீ எடுக்கப்போறோம் என்றால், அதற்கு சரியான ஒரு தமிழ் வார்த்தையை சொல்வர்.

இதையும் படிங்க: 2026 தேர்தல் குறித்த கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!

அவர் ஆங்கில வார்த்தையில் உள்ளதை, சரியாக தமிழில் சொல்லவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார். அவர் முதலில் சொல்லும்போது எனக்கு புரியவில்லை, ஆனால் இப்போது எல்லாமே புரிகிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளர்.

சீமான் குறித்து நடிகை கிரித்தி ஷெட்டி பேசிய வீடியோ பதிவு:

பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கிரித்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா,சீமான், ஆனந்த ராஜ், யோகி பாபு, என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Follow Us