Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Krithi Shetty: நான் ரொம்பவே சென்சிடிவ்.. என்னையே நான் இழந்துவிட்டேன்- கண்ணீருடன் பேசிய க்ரித்தி ஷெட்டி!

Krithi Shetty On Criticism: தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளர்ந்துவருபவர் க்ரித்தி ஷெட்டி. இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் தொடர்ந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் தன்மீது வரும் விமர்சனங்கள் குறித்து மனம்திறந்துள்ளார்.

Krithi Shetty: நான் ரொம்பவே சென்சிடிவ்.. என்னையே நான் இழந்துவிட்டேன்- கண்ணீருடன் பேசிய க்ரித்தி ஷெட்டி!
க்ரித்தி ஷெட்டிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Dec 2025 12:09 PM IST

தென்னிந்தியாவில் பிரபலமான இளம் நடிகையாக இருந்து வருபவர் க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் மட்டுமே கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் அறிமுக திரைப்படமாக அமைந்திருப்பது வா வாத்தியார் (Vaa Vaathiyaar). நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்கியிருக்கும் நிலையில், அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய க்ரித்தி ஷெட்டி, தன்மீது வரும் விமர்சனங்களுக்கு கண்ணீருடன் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த நடிகை க்ரித்தி ஷெட்டி :

அந்த நேர்காணலில் பேசிய நடிகை க்ரித்தி ஷெட்டி, ” என்னை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும் நான் மிகவும் சென்சிடிவ் என்று, இது குற்றமா என்பது எனக்கு தெரியவில்லை. நடிப்பது என்பது ரொம்பவே கடினமான வேலை. இந்த வேலைக்காக உங்களிடம் இருந்து சில விஷயங்களை இலக்க வேண்டியது இருக்கும். ஏனென்றால், நிறைய சக்தி நடிப்பில் போய்விடும். நீங்கள் ஒரு பொது நபராக மாறிவிட்டால், உங்களை பற்றி நிறைய விஷயங்கள் வெளியே பேசப்படும்.

இதையும் படிங்க: சூர்யா47 படத்துக்காக புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா!

சொல்லப்போனால், பல விமர்சனங்கள் மற்றும் பல எதிர்மறை விஷயங்கள் வரும். அந்த விஷயங்கள் ஒருபோதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது, அது நியாயமானது இல்லைதான். இதன் காரணமாக என்னிடம் இருந்து நான் பல விஷயத்தை இழந்திருக்கிறேன். எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ அப்போதெல்லாம், எனது அம்மாதான் எனக்கு உறுதியாக இருப்பார். அவர்தான் என்னை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவார்” என அந்த நேர்காணலில் க்ரித்தி ஷெட்டி கண்ணீருடன் பேசியுள்ளார்.

விமர்சனங்கள் குறித்து நடிகை க்ரித்தி ஷெட்டி பேசிய வீடியோ பதிவு :

நடிகை க்ரித்தி ஷெட்டியின் நடிப்பில் வா வாத்தியார் படத்தை தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஜீனி போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இதில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகிறது. மேலும் ஜீனி வரும் 2026ம் ஆண்டில் பிப்ரவரியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.