Krithi Shetty: சூர்யா சாருடன் படம் பண்ணவேண்டியதா இருந்தது.. ஆனால் – க்ரித்தி ஷெட்டி!
Krithi Shetty About Suriya: சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் க்ரித்தி ஷெட்டி. இவரின் நடிப்பில் வா வாத்தியார் மற்றும் LIK போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் சூர்யாவுடன் நடிக்கவிருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty). உப்பனே என்ற படத்தில் தனது 17வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாம் போன்ற மொழிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் உருவாகி வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் முதலில் வெளியாகவுள்ள படம்தான் வா வாத்தயார் (Vaa Vaaththiyaar). இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் (Karthi) ஜோடியாக இவர் நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்க்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை க்ரித்தி ஷெட்டி, நடிகர் சூர்யாவுடன் (Suriya) ஒரு படத்தில் நடித்து பின் அந்த படம் நடக்காமல் போனது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: படையப்பா பட காட்சியை ரீ கிரியேட் செய்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது குறித்து மனம் திறந்த க்ரித்தி ஷெட்டி:
அந்த நேர்காணலில் நடிகை க்ரித்தி ஷெட்டி, வா வாத்தியார் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “சூர்யா சாருடன் ஒரு திரைப்படத்தில் கொஞ்ச நாட்களாக நடித்தேன், ஆனால் அந்த திரைப்படம் நடக்கவில்லை. மேலும் நான் நம்புகிறேன், எதிர்காலத்தில் அவருடன் நிச்சயமாக பணிபுரிவேன் என நம்புகிறேன். சூர்யா சார் மிகவும் திறமையான நபர், மேலும் அவருடன் அந்த படத்தில் கொஞ்சநாள் நடித்திருந்தாலும், அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது சூர்யா 47 படம்… வைரலாகும் போட்டோ
மேலும் சூர்யா சார் மிகவும் மரியாதைக்குரியவர், மேலும் சிறந்த நடிகரும் கூட, அவர் தனது கண்களின் மூலமாகவே பல எமோஷங்களை காட்டுவார். அவருடன் நடிப்பதே எனக்கு ஒரு நடிப்பு வகுப்பிற்கு சென்றதுபோல இருந்தது” என க்ரித்தி ஷெட்டி ஓபனாக பேசியுள்ளார். மேலும் அந்த படம் வாடிவாசல் படமாக இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.
சூர்யா குறித்து நடிகை க்ரித்தி ஷெட்டி பேசினாய் வீடியோ பதிவு :
#KrithiShetty about #Suriya
– I’m hoping to work with Suriya sir in the future.
– He is a very talented actor, and there is a lot to learn from him.
– Suriya sir is very respectful and a highly skilled actor.pic.twitter.com/QAJXIWu6p5— Movie Tamil (@_MovieTamil) December 6, 2025
க்ரித்தி ஷெட்டி கார்த்தி மற்றும் சூர்யா என அண்ணன் தம்பி இருவருடனும் படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வா வாத்தியார் படத்தை தொடந்து, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஜீனி போன்ற தமிழ் திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.