Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

படையப்பா பட காட்சியை ரீ கிரியேட் செய்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

Superstar Rajinikanth: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக திரையுலகில் உள்ளவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி அவரை பெருமைப்படுத்தி வருகின்றனர்.

படையப்பா பட காட்சியை ரீ கிரியேட் செய்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Dec 2025 14:22 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் உலக அளவில் உள்ள ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு வில்லனாக கலக்கி நாயகனாக ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் பார்த்து பிரமிக்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பு மட்டும் இன்றி இவரது ஸ்டைல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தை பார்த்து ஒரு டயலாக் சொல்வார். “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னவிட்டு போகல” என்று. அந்த டயலாக்கிற்கு ஏற்றார் போல தற்போது 75 வயதை எட்டப்போகும் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலையும் அழகையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்த்தை கொண்டாடும் விதமாக அவருக்கு கோவாவில் நடைப்பெற்ற திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்து கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனைக் கொண்டாடும் விதமாகவும் சினிமாவில் 50 ஆண்டு கடந்ததைக் கொண்டாடும் விதமாகவும் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படையப்பா பட காட்சியை ரீ கிரியேட் செய்த ரஜினிகாந்த்:

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படையப்பா படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படையப்பா படத்தின் காட்சிகளை ரஜினிகாந்த் ரீ கிரியேட் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோவை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 50 நாட்களைக் கடந்த டியூட்… படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் வீடியோ

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்