தமிழகம் ஒரு குடும்பத்தின் ஏடிஎம்மாக மாறிவிட்டது – திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சியில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தார். அப்போது பேசிய அவர், முழு மாநில மக்களும் தற்போதைய திமுக அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
திருச்சி, மார்ச் 11 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சியில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தார். முன்னதாக அரசு விழாவில் பங்கேற்ற அவர் 6 புதிய ரயில் சேவைகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு திட்டம் என சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி நகரில் உங்கள் முன் இங்கே இருப்பது எனக்கு பெருமிதமான தருணம். தைரியம், நம்பிக்கை மிகுந்த நகரம் திருச்சி. கார்கில் போரில் தியாகம் புரிந்த மேஜர் சரவணன் திருச்சியை சேர்ந்தவர். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக்கினோம் என்றார்.




இதையும் படிக்க : 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு – பிரதமர் மோடி அறிவிப்பு
திருச்சியில் பேசிய நரேந்திர மோடி
Be it rallies in Tamil Nadu, in personal meetings across India, or in programmes like Kashi Tamil Sangamam, I take a keen interest in connecting with Tamil people. I can feel the pulse of the state very clearly.
The river Kaveri flows with unstoppable force. Similarly, in this… pic.twitter.com/aTFLv1Qbx7
— BJP (@BJP4India) March 11, 2026
மேலும் பேசிய அவர், முழு மாநில மக்களும் தற்போதைய திமுக அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேவை செய்யும் அரசையே மக்கள் விரும்புகின்றனர்; ஒரு குடும்பத்திற்காக மட்டும் செயல்படும் அரசை அவர்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சக்தி என்டிஏ கூட்டணியிடம் உள்ளது என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், முழு மாநில மக்களும் தற்போதைய திமுக அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேவை செய்யும் அரசையே மக்கள் விரும்புகின்றனர்; ஒரு குடும்பத்திற்காக மட்டும் செயல்படும் அரசை அவர்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சக்தி என்டிஏ கூட்டணியிடம் உள்ளது என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்றார்.
மதுரை சர்வதேச விமான நிலையம்
மேலும் பேசிய அவர், திருச்சியில் அரசு சார்பில் நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கடந்த சில நாட்களுக்கு முன் மதுரைக்கு சென்றிருந்தேன். அங்கு ரூ.4,400 கோடிக்கு மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 11, 2026 அன்று திருச்சியில் ரூ.5,600 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்க திருச்சி வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக நாங்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகிறோம் என்றார்.
திருச்சியில் புதிய விமான நிலையம் அமைத்தோம். மதுரையில் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படவுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் இனி மதுரைக்கு வருவார்கள். மதுரையில் புகழ்பெற்ற மல்லிகைப்பூ இனி அன்று மாலையே பிரிட்டனுக்கும் பாரிஸுக்கும் செல்லும் என்றார்.
இதையும் படிக்க : டெல்லி, மும்பைக்கு பின் சென்னைக்கு வந்த சேவை… ரூ.50-க்கு இத்தனை வசதியா?
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக மக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த பொறுப்பை மறந்து மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது. திமுகவில் அனைத்தும் ஒரு குடும்பத்தை சுற்றியே இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏ யாராக இருந்தாலும் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் தான் உள்ளது. தமிழ்நாட்டை ஒரு குடும்பத்திற்கான ஏடிஎம்மாக மாறியுள்ளது என்று விமர்சித்தார். இந்த மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் வேலை வழங்குவதாக கூறி பணம் வாங்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.
கிராமங்களில் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தை திமுக தாமதப்படுத்தியுள்ளது. மேலும், பெங்களூரு – சென்னை மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை முன்மொழியப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இன்று குற்றவாளிகள் அச்சமின்றி பெண்களுக்கு தீங்குவிளைவிக்கிறார்கள். என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோக நெட்வொர்க்கை பாதித்துள்ளது. இந்தியா ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை நம்புகிறோம். எந்த சூழ்நிலையிலும் இந்திய மக்களின் நலனையே மத்திய அரசு முதன்மையாக கருதும். யாரும் அச்சப்பட தேவையில்லை. வதந்திகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். என்றார்.