AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு – பிரதமர் மோடி அறிவிப்பு

PM Modi Launches Development Projects : திருச்சி பஞ்சப்பூரில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு – பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Mar 2026 18:17 PM IST

திருச்சி, மார்ச் 11 : திருச்சி பஞ்சப்பூரில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பொருநை அருங்காட்சியக வடிவ கேடயத்தை பிரதமர் மோடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

ரயில் சேவை தொடங்கிவைப்பு

பின்னர் சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடி முதலீட்டில் எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதில், 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவை உள்ளிட்டவற்றை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இதையும் படிக்க : தொகுதிகள் குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ..

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு

பின்னர் வணக்கம் என தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிட்டி கேஸ் விநியோக வலையமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த வலையமைப்பு தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு வழங்கப்படும். மேலும் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களும் இந்த வசதியைப் பெறும். இதன் மூலம் வீடுகளுக்கே நேரடியாக எரிவாயு கிடைக்கும் என்பதால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் எளிதாகும்.

இதையும் படிக்க : தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…

பிரதமர் மோடி பேசிய வீடியோ

 

மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும் என்று பேசினார்.

Follow Us