Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: என்னப்பா ஆரம்பிக்கலாமா? மலேசியாவில் கார் ரேஸிற்கு தயாராகிவரும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ!

Malaysia 24H Series: இந்திய நடிகர்களில் கார் ரேஸிற்கும் சரியாக தனது பங்கினை அளித்துவருபவர் தல அஜித் குமார். இவர் நாயகனாக சினிமாவில் இருந்தாலும், சிறந்த கார் ரேஸராக இந்திய அளவிற்கு பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸில் தனது அணியுடன் அஜித் கலந்துகொள்ளவுள்ளார். இது தொடர்பான பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: என்னப்பா ஆரம்பிக்கலாமா? மலேசியாவில் கார் ரேஸிற்கு தயாராகிவரும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Dec 2025 12:50 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் தல என அழைக்கப்பட்டுவருபவர் அஜித் குமார் (Ajith kumar). இவரின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்ற அது குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichanthiran) இயக்க, அஜித் குமார் மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு அஜித் குமார், தனது கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். கிட்டத்தட்ட இவர் கார் ரேஸில் இறங்கி 1 வருடத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இதுவரை 4 போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் விரைவில் மலேசியாவில் (Malaysia) நடைபெறவுள்ள 24H கார் ரேஸ் சீரிஸிலும் (24H Car Race Series) தனது அணியுடன் இவர் கலந்துகொள்கிறார்.

இதற்காக தற்போது மலேசியாவில் அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகவருகிறது. மேலும் இந்த கார் ரேஸிலும் அஜித் குமார் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காமெடி பண்ணா டைட்டில் வின்னர் பட்டத்தை தூக்கி கொடுக்கனுமா? கானா வினோத் குறித்து கருத்தை முன் வைத்த ஆதிரை!

மலேசியாவில் அஜித் குமார் கார் ரேஸில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ பதிவு :

இந்த வீடியோவில் அஜித் குமார், மலேசிய ரசிகர்களை கண்டதும் தனது கரங்களை உயர்த்தி வணக்கம் தெரிவித்துள்ளார். மேலும் தனது அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் தனது இரு கரங்களை கூப்பி, ஹார்ட் வடிவத்தில் வைத்திருந்தார்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தளபதி விஜயை தொடர்ந்து மகன் செய்யும் சிறப்பான சம்பவம்!

இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், தனது ரசிகர்களை பார்த்தவுடன் குழந்தையாகவே அஜித் மாறிவிட்டார் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவில் அஜித்தின் ரேஸில் போட்டியில் சிறுத்தை சிவா மற்றும் சுரேஷ் சந்திரா :

அஜித் குமாரின் புதிய ரேஸ் போட்டியானது மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக அஜித் குமார் சில தினங்களுக்கும் முன்னே மலேசியா சென்ற நிலையில், தற்போது அவருடன் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவாவும் இணைந்துள்ளனர். அஜித் குமாரின் ஆதரவாளர்களாக அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரேஸிலும் அஜித் குமாரின் அணி நிச்சயமாக வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.