Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தளபதி விஜயை தொடர்ந்து மகன் செய்யும் சிறப்பான சம்பவம்!

Sigma Movie Update: தளபதி விஜய்யின் மகன்தான் சஞ்சய் ஜேசன். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக வேட்டைக்காரன் படத்தில் நடனமாடியிருக்கிறார். மேலும் தற்போது இவர் தமிழில் இயக்குனராக நுழைந்திருக்கும் நிலையில், அவரின் முதல் படம்தான் சிக்மா. தற்போது இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தளபதி விஜயை தொடர்ந்து மகன் செய்யும் சிறப்பான சம்பவம்!
சிக்மா திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Dec 2025 22:51 PM IST

தமிழ் சினிமாவில் சிறுவயது நட்சத்திரமாக பிரபலமானவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தனது தந்தை தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) வேட்டைக்காரன் என்ற படத்தில் வெளியான பாடலில் இணைந்து சிறப்பு நடனமாடியிருந்தார். இதை தொடர்ந்து சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இயக்குனராக ஆகுவதற்கு முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் அறிமுக படமாக உருவாகிவருவதுதான் சிக்மா (Sigma). இந்த திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா புரொடக்ஷன் (Lyca Production) நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த சிக்மா படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடிக்க, தெலுங்கு இளம் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு பிரம்மாண்ட இசையமைப்பாளர் தமன் எஸ் (Thaman S) இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது தளபதி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

தளபதி விஜய் சினிமாவை விட்டு செல்லும் நிலையில், அவரின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். இந்த சிக்மா படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்திலிருந்து ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? கம்ருதீனால் தொடரும் பிரச்னை… FJ-யிடம் கண்ணீருடன் சண்டையிட்ட பார்வதி!

சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பு அப்டேட் :

இந்த சிக்மா படத்தின் ஷூட்டிங்கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்த நிலையில், பாடல்களுக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவருகிறதாம். இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் கலகலப்பு 2, கேங்கர்ஸ் போன்ற படங்களில் நடித்த நடிகை கேத்ரின் தெரசா சிறப்பு நடமானாட உள்ளாராம்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது ரியோவின் ராம் in லீலா படம்… வைரலாகும் போஸ்ட்

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் நடனமாடியுள்ளாராம். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. வேட்டைக்காரன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து ஜேசன் சஞ்சய் நடனமாடவுள்ளார் என்ற நிலையில், ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சிக்மா படம் தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், தமிழ் நாடு, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவந்தது. இந்த படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் ஜேசன் சஞ்சய் 01 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் சிக்மா என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகி அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.