Thalapathy Vijay: இயக்குநர் மகன் டூ தமிழ்நாட்டின் தளபதி.. நாயகனாக விஜய் கடந்துவந்த 33 ஆண்டுகள்!
33 Years Of Vijayism: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் கடந்த 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இன்றுடன் இந்த படமானது வெளியாகி 33 ஆண்டுகளை கடந்த நிலையில், தளபதி விஜயும் சினிமாவில் 33 வருடத்தை கடந்துள்ளார்.
நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நாயகன் என்றே கூறலாம். இவருக்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலகோடி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தொடர்ந்து 33 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு சிறுவயதிலிருந்தே படங்களில் நடிக்க ஆர்வம் இருந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாகவும் படத்தில் நடித்திருக்கிறார். பின் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் (S.A. Chandrasekhar) இயக்கிய படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து தனது முயற்சியை விடாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் படங்களுக்கு ஆரம்பகாலகட்டத்தில் பல நெகடிவ் விமர்சனங்கள் இருந்தது. அந்த வகையிலும் தனது உழைப்பின் மீது நம்பிக்கைவைத்து மற்ற இயக்குநர்களுடன் பணியாற்ற தொடங்கினார். இவர் கதாநாயகனாக முதலில் நடித்த படம் நாளைய தீர்ப்பு (Naalaiya Theerpu).
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்றுடன் இந்த படமானது வெளியாகி 33 வருடத்தை கடந்த நிலையில், தளபதி விஜய்யும் சினிமாவில் தனது 33 ஆண்டை கடந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.




இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? கம்ருதீனால் தொடரும் பிரச்னை… FJ-யிடம் கண்ணீருடன் சண்டையிட்ட பார்வதி!
இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய்யின் 33வது வருடம் தொடர்பான பதிவு :
33 Years of Cinema, A lifetime impact #33yearsofvijayism@TNVFC_OFFI pic.twitter.com/OWltRm3eoe
— PREMGI (@Premgiamaren) December 3, 2025
இயக்குநர் மகன் டூ தமிழகத்தின் தளபதி :
விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான படங்களில்தான் ஆரம்பத்தை கதாநாயகனாக நடித்துவந்தார். இவருக்கு முதலிலே தந்தை மூலமாக அறிமுகமாக ஹீரோ என விமர்சனங்கள் எழுந்துவந்து. பின் மற்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி வெற்றி படங்களை கொடுக்க தொடங்கினார். ஆரம்பகால கட்டத்தில் இவரின் படங்கள் பெருமளவு வரவேற்கப்படாமல் இருந்தாலும், போகப்போக இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக தொடங்கியது. அந்த வகையில் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்த படம் கில்லி. இந்த படத்தை அடுத்ததாக இவருக்கு அடுத்தடுத்த வெற்றி படங்கள் தொடர்ந்து அமைந்திருந்தது. இவருக்கு வெற்றி படங்கள் பல இருந்தாலும் ஆரம்பத்தில், அதிக தோல்வி படங்களும். இருந்தது இவருக்கு 50வது படமாக அமைந்த சுறா பெரும் தோல்வியடைந்தது என்பது தெரிந்ததே.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி… இணையத்தில் கசிந்த தகவல்
ஆனால் அதன் பிறகு காம்பேக் கொடுக்கும் விதத்தில் வேலாயுதம், நண்பன் மற்றும் துப்பாக்கி என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். ஆரம்பத்தில் படங்களில் இளைய தளபதி என அழைக்கப்பட்டுவந்த விஜய் பின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவந்தார். மேலும் தொடர்ந்து இதுவரை கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழக அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2024ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு தமிழக தேர்தலில் மகளமிறங்குகிறார்.
இவரின் கடைசி படமாக ஜன நாயகன் அமைந்த நிலையில், இதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்கமாட்டார் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய்யின் 33வது வருடம் மற்றும் கடைசி படம் ஜன நாயகன் என்ற நிலையில், இன்று 2025 டிசம்பர் 4ம் தேதியில் ஜன நாயகன் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் அல்லது மற்ற அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.