பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
With Love Movie OTT Review: தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வித் லவ். இந்தப் படம் தர்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரோம் காம் பாணியின் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேறைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வித் லவ். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் அறிமுக இயக்குநர் இயக்கி இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு?
சென்னையில் டிசைனராக வேலை செய்யும் அபிஷனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி வீட்டில் திருமணத்திற்காக அபிஷனுக்கு பார்த்த பெண் தான் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது தான் அபிஷன் படித்த அதே பள்ளியில் தான் அனஸ்வரா படித்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களது பள்ளி நினைவுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களின் காதல் கதைகளை பேசுகிறார்கள்.




Also Read… இந்த சினிமா நிலையில்லாத ஒன்னு என்பதை நான் புரிந்துகொண்டேன் – நடிகை பிரியங்கா மோகன்
அப்படி பேசும் போதுதான் பள்ளி காதலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்பதை தெரிந்துகொண்டு அவர்களை தேடி காதலை சொல்ல கிளம்புகிறார்கள். இறுதியில் அவர்கள் தங்களது பள்ளி காதலர்கலை சந்தித்தார்களா அவர்களிடம் காதலை வெளிப்படுத்தினார்களா என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… டியூட் பார்ட் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை