AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனது பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்து!

Yamuna Chinnadurai: தமிழ் மக்கள் மத்தியில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் யமுனா சின்னத்துரை. இவர் ஏற்கனவே சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சொந்தமாக சேலை பிஸ்னஸும் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் தற்போது புதிய கடை ஒன்றை திறந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்து!
யமுனா சின்னத்துரைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Mar 2026 18:06 PM IST

தமிழில் பிரபல சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக இருப்பவர் யமுனா சின்னத்துரை (Yamuna Chinnadurai) . இவர் தமிழில் கடந்த 2017ம் ஆண்டில் ஜீ தமிழில் (Zee Tamil) ஒளிபரப்பபட்டுவந்த திரில்லர் தொடரான “யாரடி நீ மோகினியில்” நடித்திருந்தார். இதில் இறந்த சஞ்சீவ்வின் மனைவி சித்ரா என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்திருந்தது. ஆனால் அவர் இதற்கு முன்பே வெள்ளித்திரை படங்களில் சில அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாரடி நீ மோகினி என்ற சீரியலைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அபூர்வ ராகங்கள்” என்ற நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து சீரியலில் நடித்துவந்த இவர், தற்போது சீரியல் நடிகை என்பதை தொடர்ந்து தனது சொந்த பிஸ்னஸில் இறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே சேலை, பட்டு புடவைகள் போன்ற பிஸ்னஸ் செய்துவந்த நிலையில், தற்போது இவரின் பிஸ்னஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இவர் “சேலையும் ரவிக்கையும்” (Selaiyum Ravikaiyum) என்ற பெயரில் தொடர்ந்து வியாபாரம் செய்துவரும் நிலையில், புதிய இடத்தில் கடை ஒன்றை திறந்துள்ளார். அந்த கடைக்கு பூஜை போடும் வீடியோவை இவர் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: யூத் பார்ட் 2 தனுஷ் சாரை வெச்சி எடுக்குறேனா?.. எனக்கு அவர பாத்தாலே பயம் – கென் கருணாஸ்!

நடிகை யமுனா சின்னத்துரை பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

நடிகை யமுனா கடந்த சில ஆண்டுகளாகவே சீரியலில் நடிப்பதை தொடர்ந்து, தனது சொந்த பிஸ்னஸில் இறங்கியுள்ளார். செல்லையும் ரவிக்கையும் என்ற பெயரில் சேலை வியாபாரம் இவர் செய்துவரும் நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் உண்டு. தற்போது தனது பிஸ்னஸின் அடுத்தகட்டமாக புது கடை ஒன்றி திறந்துள்ளார். இந்நிலையில் இவரின் இந்த முன்னேற்றத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சென்னையில் உள்ள வீட்டுற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சங்கீதா மனு!

சொந்த பிஸ்னஸில் லாபம் பார்க்கும் நடிகை யமுனா சின்னத்துரை :

நடிகை யமுனா சின்னத்துரை சீரியல்களில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. சீரியல் பிரபலத்தை தொடர்ந்து சொந்த தொழிலில் முன்னேற நினைத்த இவர், தற்போது ஒரு பிஸ்னஸ் வுமன்னாக இருக்கிறார். இவர் வாரத்திற்கு எப்படியும் கிட்டத்தட்ட ரூ 30000 முதல் ரூ 50000 மேல் இந்த தொழிலின் மூலமாக சம்பாதித்துவருகிறாராம். அந்த வகையில் புதிதாக கடை ஒன்றை இவர் திறந்திருக்கும் நிலையில், இன்னும் அதிக வருமானத்தை இவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us