AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த சினிமா நிலையில்லாத ஒன்னு என்பதை நான் புரிந்துகொண்டேன் – நடிகை பிரியங்கா மோகன்

Actress Priyanka Mohan About Negative Campaign: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நெகட்டிவ் விமர்சனங்கள் தனது எதிராக எப்படிப் பரப்பப்பட்டது என்பது குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

இந்த சினிமா நிலையில்லாத ஒன்னு என்பதை நான் புரிந்துகொண்டேன் – நடிகை பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Mar 2026 10:41 AM IST

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் ப்ரதர். இதில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரியங்கா மோகன் நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் தே கால் ஹிம் ஓஜி. இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள மேட் இன் கொரியா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த சினிமா நிலையில்லாத ஒன்னு என்பதை நான் புரிந்துகொண்டேன்:

அந்தப் பேட்டியில் உங்களுக்கு எதிராக கூட்டாக நெகட்டிவ் விமர்சனங்கள் தொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், நான் ஆம் என்று கூறுவேன், பிரச்சாரம் என்பது ஒரு பெரிய வார்த்தை. ஆனால் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன, அதை நான் கடந்த காலத்தில் சிந்திக்க விரும்பவில்லை. ஆனால் இது ஒரு நிச்சயமற்ற தொழில் என்பதை நான் புரிந்துகொண்டேன், யாருக்கும் எதுவும் நடக்கலாம். நிச்சயமாக அது எனக்கு வலிக்கிறது, ஆனால் அந்த வீழ்ச்சி எனக்கு எழுச்சி பெற உதவியது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விரைவில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் பிரியங்கா மோகன் பேச்சு:

Also Read… இன்று மாலை யூத் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சிம்பு – அப்டேட் இதோ!

Follow Us