AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்… ரசிகர்களிடையே வைரலாகும் பவழ மல்லி!

Pavazha Malli Song Composed By Sai Abhyankkar Out Now: தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர். இவரது இசையில் தற்போது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்… ரசிகர்களிடையே வைரலாகும் பவழ மல்லி!
பவழ மல்லிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Mar 2026 12:33 PM IST

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் பாடகர்கள் திப்பு – ஹரிணி. இவர்களி இருவரின் குரலில் வெளியான பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த திப்பு – ஹரிணி தம்பதியின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் சாய் அபயங்கர். இன்டிபென்டன்ட் பாடல்களை இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் சாய் அபயங்கர். அதன்படி சாய் அபயங்கர் இன்டிபென்டன்டாக உருவாக்கிய கட்சி சேர மற்றும் ஆச கூட பாடல்கள் உட்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இன்டிபென்டன்ட் பாடல்களை உருவாக்கி வந்த சாய் அபயங்கருக்கு சினிமாவில் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இவரது இசையில் மலையாள சினிமாவில் வெளியான பல்டி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகின்றது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக இசையமைத்து வரும் சாய் அபயங்கர் மீண்டும் தனது இசையில் ஒரு இன்டிபென்டன்ட் பாடலை உருவாக்கி உள்ளார்.

சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்:

அதன்படி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் 5-வதாக மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி பவழ மல்லி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும் இந்தப் பாடலை சாய் அபயங்கர் உடன் இணைந்து நடிகையும் பாடகியுமான ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலின் ஆடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மா இண்டி பங்காரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி கொண்டாடிய சமந்தா – வைரலாகும் வீடியோ

வெளியானது பவழ மல்லி பாடலின் ஆடியோ:

Also Read… செல்வராகவன் நடிப்பில் நாளை வெளியாகிறது மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர்

Follow Us