இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு
Director RJ Balaji About Music Director Sai Abhyankkar: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினிமாவில் பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனாக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கியதன் மூலமாகவே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதன்படி சாய் அபயங்கரின் இசையில் வெளியான 5 ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றப் பாடல் என்றால் கட்சி சேர மற்றும் ஆசை கூட ஆகியப் பாடல்கள்தான். இந்தப் பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல்களின் வெற்றியால் சாய் அபயங்கருக்கு சினிமாவில் படங்களுக்கு பாடல்களை இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சாய் அபயங்கர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி படல்களை இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் மலையாள சினிமாவில் தான் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான டியூட் படத்தில் இசையமைத்தார். இந்தப் படங்களை தொடர்ந்து சாய் அபயங்கர் இசையில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன்:
சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன். ஆரம்பத்தில், இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சார் என்று நாங்கள் அறிவித்தோம். பின்னர், சார் இந்தப் படத்தை தொடர முடியவில்லை, நாங்கள் அனைவரும் சோகமாக இருந்தோம். அதனைத் தொடர்ந்து, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இருப்பார் என்று நான் சொன்னபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் சாய் அபயங்கர் தன்னை நிரூபிக்கும்ஆற்றல் எனக்குப் பிடித்திருந்ததால் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது 200% உண்மையாக மாறியது. ஜாவா சுந்தரேசனைப் போலவே, சாய் அபயங்கர் அல்லு அர்ஜுனின் படம் உட்பட பல படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனாலும், அவர் எங்கள் படத்தில் விதிவிலக்காக சிறப்பாக பணியாற்றினார். பின்னணி இசை வேலைகள் தற்போது நடந்து வருகின்றன என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
Also Read… சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
#RJBalaji about #SaiAbhyankkar in #Karuppu 💥:
• Sai Abhyankkar is the real Java Sundaresan..😄 Initially, #ARRahman sir was the music director of this film, and we even announced it. Later, sir couldn’t continue with the project, and we were all sad..
• At first, everyone… pic.twitter.com/0qvWrOWx0s
— Laxmi Kanth (@iammoviebuff007) February 22, 2026
Also Read… கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!