AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

13 ஆண்டுகளுக்குப் பிறகு KHxRK படத்தில் ஒளிப்பதிவாளராக களமிறங்கும் ராஜீவ் மேனன்! 

cinematographer Rajiv Menon: இந்திய சினிமாவில் சினிமாட்டோகிராஃபர் மற்றும் இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் ராஜிவ் மேனன். இவர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒளிபதிவாளராக பணியாற்ற உள்ள செய்தி வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு KHxRK படத்தில் ஒளிப்பதிவாளராக களமிறங்கும் ராஜீவ் மேனன்! 
ராஜீவ் மேனன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Feb 2026 17:47 PM IST

பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராகவும், ஒளிபதிவாளராகவும் வலம் வருகிறார் ராஜிவ் மேனன். இவர் தெலுங்கு  சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சைத்தன்யா என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக தனது பணியைத் தொடங்கினார். இதுதான் ராஜிவ் மேனன் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி  என பான் இந்திய மொழிகளில் ஒளிபதிவாளராக வலம் வந்த ராஜிவ் மேனன் கடந்த 1997-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மியூசிக்கள் ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான இந்த படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குநர், ஒளிபதிவாளராக வலம் வந்த ராஜிவ் மேனன் 2019-ம் ஆண்டு வெளியான சர்வம் தாள மயம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை ராஜிவ் மேனன் இயக்கி இருந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது KHxRK படத்தில் ஒளிபதிவாளராக ராஜிவ் மேனன் பணியாற்ற உள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவாளராக களமிறங்கும் ராஜீவ் மேனன்:

தமிழ் சினிமாவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் கொண்டாடும் நிகழ்வு ஒன்று நடைப்பெற்றுள்ளது. அதன்படி நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு  ஒளிபதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிபதிவு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் இறுதியாக 2013-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்திற்கு ஒளிபதிவாளராக பணியாற்றினார். அதன்படி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒளிபதிவாளராக பணியாற்ற உள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… KH X RK Movie: ரஜினிகாந்த்-கமல்ஹாசனின் கூட்டணி படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயண்ட்- நாளை வெளியாகும் சிறப்பு அப்டேட்!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அமிதாப் பச்சன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் குட்பை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?