AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன

Velpari Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சங்கர். இவர் பிரபலமான வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான செய்தியின்படி அந்தப் படத்தில் நடிக்க வைக்க நடிகர் தனுஷிடம் சங்கர் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன
தனுஷ் மற்றும் சங்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Feb 2026 10:46 AM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சங்கர். இவரை ரசிகர்களும் திரையுலகினரும் பிரமாண்ட இயக்குநர் சங்கர் என்றே அழைப்பார்கள். அதற்கு காரணம் இவரது படங்களில் பயன்படுத்தப்படும் செட் மற்றும் நடிகர்களின் எண்ணிக்கை எப்போது பிரமாண்டமாகவே இருக்கு. குறிப்பாக சங்கர் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் ஒரு பாடலுக்கே பல கோடிகள் செலவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இயக்குநர் சங்கரை அனைவரும் பிரமாண்ட இயக்குநர் என்று அழைத்து வருகின்றனர். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக உள்ள ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், விக்ரம் என பலர் இவரது இயக்கத்தில் உருவான படங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குநர் சங்கருக்கு இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றியைக் கொடுக்கவில்லை. அதன்படி இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகியப் படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் சங்கர் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்?

இந்த நிலையில் இயக்குநர் சங்கர் அடுத்ததாக தமிழக மக்களிடையே பிரபலமான நாவல் வேள்பாரியை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வேலை செய்து வரும் நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. அதன்படி வேள்பாரி படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க இயக்குநர் சங்கர் அவரை அனுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தனுஷின் கால் ஷீட்டிற்காக அவரது தேதிகளை சங்கர் சரிபார்த்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே சங்கர் தனுஷின் 55-வது படத்தின் பூஜையில் கலந்துகொண்டதாகவும் தெரிகிறது.

Also Read… தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது – சாய் அபயங்கர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷிடம் இருந்து நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் – மமிதா பைஜூ