AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் நாட்டில் தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

Thaai Kizhavi Movie Theatrical Rights Update: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா சரத்குமார் வித்யாசமான வேடத்தில் நடித்துள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழ் நாட்டில் தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!
தாய் கிழவி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Feb 2026 15:22 PM IST

தமிழ் சினிமாவில் தனது 15 வயதில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது மக்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் கதையின் நாய்கியாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தாய் கிழவி. இந்தப் படம் முன்னதாக 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பின்பு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ராதிகாவின் கதாப்பாத்திரமும் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். இது அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற ஏஜிஎஸ் சினிமாஸ்:

இந்த தாய் கிழவி படத்தில் இருந்து போஸ்டர் மற்றும் வீடியோக்கள் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் தாய் கிழவி படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல ஏஜிஎஸ் சினிமாஸ் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Malavika Mohanan: ‘தி ராஜா சாப் பட ஆக்ஷன் காட்சியில் டூப்-பை பயன்படுத்தினேனா?’- மாளவிகா மோகன் ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு!

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்!

Follow Us