AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் சூப்பர் டீலக்ஸ் பட இயக்குநருடன் இணைந்த விஜய் சேதுபதி – ஃபார்ட் லுக் ரிலீஸ் எப்போது?

Thiagarajan Kumararaja And Vijay Sethupathi Reunion: நடிகர் விஜய் சேதுபதி, ஏற்கனவே இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் சூப்பர் டீலக்ஸ் பட இயக்குநருடன் இணைந்த விஜய் சேதுபதி – ஃபார்ட் லுக் ரிலீஸ் எப்போது?
தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Feb 2026 15:45 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை சில படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொரு படங்களும் நல்லவிதமாக பேசப்பட்டுவருகிறது. இவர் தமிழில் “ஆரண்ய காண்டம்” (Aaranya Kaandam) என்ற படத்தை இயக்கி இயக்குநராக நுழைந்தார். கடந்த 2011ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) , ஃபகத் ஃபாசி, சமந்தா (Samantha), ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மக்களிடையே சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த புது படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப்படி இப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் வரும் 2026 பிப்ரவரி 16ம் தேதியில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

விஜய் சேதுபதியின் புது திரைப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் குறித்து வெளியான பதிவு:

இப்படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்க, டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தில் தற்போதுவரை விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு ஜோடியாக எந்த பிரபலம் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படகிவில்லை.

விஜய் சேதுபதியின் புது திரைப்படங்கள் :

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த் திரைப்படமானது தயாராகியுள்ள நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படமும் முழுமையாக தயாரான நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க – இயக்குநர் பா ரஞ்சித்

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மேலும் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 5-க்கும் மேற்பட்ட படங்களை விஜய் சேதுபதி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us