Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dashamakan: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பு இதோ!

Dashamakan Movie First Single Update: தமிழில் ஆரம்பத்திலிருந்தே படங்களில் கதாநாயகனாக நடித்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவரும் படம்தான் தாஷமக்கான். இந்த படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dashamakan: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பு இதோ!
தாஷமக்கான் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Feb 2026 15:26 PM IST

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் டீசல் (Diesel) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது சென்னையில், டீசல் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் அமைந்திருந்தது. இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்து சாமி (Shanmugam Muthusamy) இயக்க, ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி இருவருமே இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டி தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது ஓரளவ மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் வட சென்னை பட பாணியில் ஹரிஷ் கல்யாண் நடித்துவரும் ஆக்ஷன் திரைப்படம்தான் தாஷமக்கான் (Dashamakan). இந்த திரைப்படத்தை இயக்குநர் வினீத் வரப்ரசாத் (Vineeth Varaprasad) இயக்க, திங் ஸ்டூடியோஸ் (Think Studios) நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாஷமக்கான் படத்தின் முதல் பாடலான “ராப் பேட்டில்” (Rap Battle) என்ற படலானது வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: எத்தனை வருடங்கள் ஆச்சு… இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் க்ளீன் ஷேவ் போட்டோ

ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பதிவு:

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாஷமக்கான் என்ற படமானது தயாராகிவருகிறது. இப்படத்தில் ராப் பாடகளராகவும், ஆக்ஷன் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படமானது வட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்டார் படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க – இயக்குநர் பா ரஞ்சித்

மேலும் இதில் நடிகர்கள் சத்தியராஜ் மற்றும் சுனில் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்தை படக்குழு 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.