Harish Kalyan: ‘அந்த காட்சியில் அழுகை வந்துடுச்சு’.. வெளிப்படையாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Harish Kalyan About Idli Kadai Movie: கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்பில் லப்பரப்பந்து படத்தை தொடர்ந்து, வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம் டீசல். இப்படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியவர், தனுஷின் இட்லி கடை படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. ரோமெண்டிக் ஹீரோவாக சினிமாவில் நடித்துவந்த இவர், தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ஆக்ஷ்ன், க்ரைம் திரில்லர் மற்றும் அதிரடி திரில்லர் என மாறுபட்ட கதைக்களத்தில் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் லப்பர் பந்து (Labber Pandhu). கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இப்படத்திற்கு முன்னே ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தமாகி நடித்துவந்த படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி (Shanmugam Muthusamy) இயக்கியுள்ளார். மேலும் தி தியேர்ட் ஐ தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இதில் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்திருக்க, ஜோடியாக அதுல்யா ரவி (Athulya Ravi) நடித்திருக்கிறார். இப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஹரிஷ் கல்யாண், தனுஷின் (Dhanush) இட்லி கடை (Idli Kadai) படத்தின் எமோஷனல் காட்சிகளை புகழ்ந்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: நீண்ட நாளுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத்.. எந்த படத்தில் தெரியுமா?
தனுஷின் இட்லி கடை படத்தை புகழ்ந்த ஹரிஷ் கல்யாண்:
சமீபத்தில் டீசல் திரைப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்டார். அதில் பல்வேறு விஷயங்களை இவர் பகிர்ந்திருந்த நிலையில், தொடர்ந்து தனுஷின் இட்லி கடை பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில் ஹரிஷ் கல்யாண், “நான் இட்லி கடை திரைப்படத்தை பார்த்தேன், பலரும் அந்த காட்சியை பார்த்திருப்பார்கள். அந்த படத்தில் கன்றுக்குட்டி ஒன்று தனுஷ் சாரி பக்கத்தில் செல்லும், அந்த காட்சியின்போது எனக்கு அழுகை வருவதுப்போல இருந்தது. கைதட்டணும் போல இருந்தது, அப்போது நான் கையும் தட்டினேன் மற்றும் எனது கண்களில் அழுகையும் வந்தது.
இதையும் படிங்க: எனக்கு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை உள்ளது – நடிகர் பிரதீப் ரங்கநாதன்
எப்படி ஒரு படத்தில் எமோஷனல் வருகிறது, இந்த விஷயங்களை எல்லாம் எனது மனதில் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். என்ன காட்சியை நினைத்து ஒரு நடிகரோ, இயக்குனரோ அல்லது எழுத்தாளரோ அந்த எமோஷனல் காட்சியை உருவாக்கியிருப்பார்கள். எப்படி அந்த காட்சியை ஒரு தொடர்ச்சியாக கொண்டுவந்திருப்பார்கள். அதுபோல, நானும் எனது படங்களுக்கான ஸ்கிரிப்ட் பேப்பர் படிக்கும்போது, அதை எனது மனதில் ஓட்டிப்பார்க்கிறேன்” என நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட டீசல் பட ட்ரெய்லர் பதிவு :
#Diesel trailer is here for you all – https://t.co/Sv6hFeL3Qp #DieselDiwali ❤️🙏 pic.twitter.com/zXQ0PhmHug
— Harish Kalyan (@iamharishkalyan) October 10, 2025
இந்த டீசல் படமானது 2025 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்துடன் டியூட் மற்றும் பைசன் என 2 படங்க வெளியாகிறது. இந்த 2025 தீபாவளி இளம் நடிகர்களுக்கான தீபாவளியாக மைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.