Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எம்.ஜி.ஆர். ரசிகரைப் பற்றிய கதை… கார்த்தியின் வா வாத்தியார் படம் பற்றி பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி!

Vaa Vaathiyaar Movie Plot: சினிமாவில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் இந்த் 2025ம் ஆண்டில் வெளியீட்டிருக்குத் தயாராகிவரும் பிரம்மாண்ட படம்தான் வா வாத்தியார். சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, இப்படத்தின் அடிப்படைக் கதை குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆர். ரசிகரைப் பற்றிய கதை… கார்த்தியின் வா வாத்தியார் படம் பற்றி பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி!
வா வாத்தியார் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Oct 2025 22:51 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி (karthi). இவர் தனது அண்ணன் சூர்யாவை (Suriya) போல சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தை இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக நடிகர் கார்த்தி , வா வாத்தியார் (Vaa Vaathiyaar), சர்தார் 2 (Sardar 2) மற்றும் மார்ஷல் (Marshal) என 3 படங்களில் ஒப்பந்தமானார். இதில் இயக்குநர் நலன் குமாரசாமியின் (Nalan Kumarasamy) இயக்கத்தில், கார்த்தி நடித்துவந்த திரைப்படம்தான் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாக்குவதாக படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி , இப்படத்தின் கதை பற்றி ஓபனாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சமந்தாவுடன் ரொமாண்டிக் சீன்.. அவங்க என்ன பண்ணணுமோ அதில் தெளிவா இருப்பாங்க – சூர்யா சொன்ன சம்பவம்!

வா வாத்தியார் படத்தின் கதைக்களம் குறித்து பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி :

அந்த நேர்காணலில் இயக்குநர் நலன் குமாரசாமி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் வா வாத்தியாரின் கதை எப்படிப்பட்டது என தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நலன் குமாரசாமி, “இந்த வா வாத்தியார் படத்தை 80ஸ் மற்றும் 90ஸ்- களில் பார்த்ததுபோல, ஒரு சரியான ஆக்ஷ்ன் மற்றும் மசாலா திரைப்படமாக எடுக்கவிரும்பினேன். இப்படத்தின் கதையானது ஒரு எம்.ஜி.ஆரின் ரசிகரை பற்றியது, அவர் தனது பேரனுக்கும் எம்ஜிஆர்-க்கும் எதோ தொடர்பு இருப்பதாக நம்புகிறார். காலப்போக்கில் அந்த பேரனும் வளர்ந்து, ராமு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: கீர்த்தி ஷெட்டியின் தமிழ் அறிமுகம்.. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

ராமு ஒரு வேடிக்கை மற்றும் எளிமையான போலீஸ் அதிகாரி. அவர் தனது நெருங்கிய நட்பை வளர்க்கிறார், பின் அந்த நட்பே அவரின் தாத்தாவிற்கு ஆபத்தாக இருக்கிறது. எதிர்பாராத அந்த கட்டத்திற்கு பிறகு ராமுவின் கதாபாத்திரம் எவ்வாறு மாறுகிறது என்பதுதான் வா வாத்தியார் படத்தின் மீதி கதை” என இயக்குநர் நலன் குமாரசாமி ஓபனாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் தேதி

இந்த வா வாத்தியார் படத்தை நலன் குமாரசாமி இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் தயாரித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.