Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Krithi Shetty: கீர்த்தி ஷெட்டியின் தமிழ் அறிமுகம்.. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

Krithi Shettys Tamil Movies: தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். ஒரே மாதத்தில் இவரின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகிறது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Krithi Shetty: கீர்த்தி ஷெட்டியின் தமிழ் அறிமுகம்.. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்.. என்னென்ன தெரியுமா?
கீர்த்தி ஷெட்டிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Oct 2025 21:18 PM IST

தெலுங்கு சினிமாவில் தனது 17வது வயதிலே உப்பேனா (Uppena) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty). இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், கடந்த 2024 ஆண்டில் வெளியான ARM என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகமாகினர். அந்த வகையில் தமிழில் கிட்டத்தட்ட 3 தமிழ் படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். இயக்குநர்கள் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy), விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) மற்றும் புவனேஷ் அர்ஜுனன் (Bhuvnesh Arjunan) என 3 இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகிவந்தார்.

இவரின் நடிப்பில் 3 படங்கள் உருவாகிய நிலையில், பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டேப்போனது. அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள 3 தமிழ் படங்களும் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் இரு படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ள நிலையில், அது எந்த படங்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

கீர்த்தி ஷெட்டியின் வெளியீட்டிற்கு காத்திருக்கும் புதிய படங்கள் :

தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவை தொடர்ந்து, நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் மும்முரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் 3 படங்கள் தயாராகியுள்ள நிலையில், வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இவரின் நடிப்பில் வரும் 2025 டிசம்பர் மாதத்தில் முதலில் வெளியாகவுள்ள படம் தான் வா வாத்தியார். நடிகர் கார்த்தியின் முன்னணி நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய், திரிஷாவுக்கு பிறகு நயன்தாரா வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி காதல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள இந்த வா வாத்தியார் திரைப்படம் வரும் 2025, டிசம்பர் 5ம் தேதியில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கார்த்தி வெளியிட்ட பதிவு :

இந்த படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பேனி படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது அறிவியல் புனைகதை திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ரவி மோகனின் நடிப்பில் தயாராகியுள்ள படம்தான் ஜீனி. இந்த படத்தை இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ளார்.

இதில் ரவி மோகனுடன், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படமும் இந்த 2025 டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.