விஜய், திரிஷாவுக்கு பிறகு நயன்தாரா வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்
Nayanthara : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாராவின் வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் காவல்துறை உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மம்மூட்டி, மோகன்லால் (Mohanlal) நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாக் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நயன்தாரா, ஃபகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்ப்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி செய்தியில் குறிப்பிட்டுள்ளதன்படி சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒரு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க : துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
இந்த நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலைய காவலர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நயன்தாராவின் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பிறகு வெடி குண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்துள்ளது. தற்போது மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். நயன்தாரா தற்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் ஹை பட ஃபர்ஸ்ட் லுக்
HI 🙂 First look 📸
Say Hi 🙂 pic.twitter.com/AanlnLMIvs— Nayanthara✨ (@NayantharaU) October 8, 2025
தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்துள்ள நயன்தாரா அதனைத் தொடர்ந்து ஹை என்ற படத்தில் கவினுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரும் பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்டுடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கரூர் சோகம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ஒத்திவைப்பா?
நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக தொடர்ந்து வருகிறார். பொதுவாக தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் குறுகிய காலகட்டத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடியும் என்ற நிலையை நயன்தாரா உடைத்திருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டாராக கமர்ஷியல் படங்களில் பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதாக இருந்தாலும் சரி சோலோ ஹீரோவாக இருந்தாலும் சரி கலக்கி வருகிறார்.