Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தாதாசாகேப் பால்கே விருது… ராணுவ தளபதியை சந்தித்த மோகன்லால் பாராட்டு பெற்றார்!

Dadasaheb Phalke Award: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது கொடுத்து கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லாலுக்கு அனைவரும் தொடர்ந்து பாராட்டுகளைப் தெரிவித்து வருகின்றனர்.

தாதாசாகேப் பால்கே விருது… ராணுவ தளபதியை சந்தித்த மோகன்லால் பாராட்டு பெற்றார்!
மோகன்லால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2025 20:07 PM IST

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல்2 எம்புரான், துடரும், ஹிருதயபூர்வம் என மூன்று படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் இரண்டு படங்களும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து இருந்த நிலையில் இதில் இறுதியாக நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயப்பூர்வம் படம் ஃபீல் குட் படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து தனது படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி அளித்து வரும் நிலையில் மோகன்லாலுக்கு மத்திய அரசு சார்பாக தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது மலையாள சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று மலையாள திரையுலகில் உள்ளவர்கள் கொண்டாடி வந்தனர். மேலும் கேரள அரசு சார்பில் நடிகர் மோகன்லாலுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராணுவ தளபதியை சந்தித்த பாராட்டு பெற்ற மோகன்லால்:

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால் டெல்லியில் உள்ள ராணுவ தளபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இன்று, இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, PVSM, AVSM அவர்களால் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட பெருமை எனக்குக் கிடைத்தது, அங்கு ஏழு இராணுவத் தளபதிகள் முன்னிலையில் எனக்கு COAS பாராட்டு அட்டை வழங்கப்பட்டது.

கெளரவ லெப்டினன்ட் கர்னலாக இந்த அங்கீகாரத்தைப் பெறுவது மிகுந்த பெருமை மற்றும் நன்றியுணர்வின் தருணம். இந்த கௌரவத்திற்கும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் ஜெனரல் உபேந்திர திவேதி, முழு இந்திய இராணுவம் மற்றும் பிராந்திய இராணுவத்தின் எனது தாய்ப் பிரிவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அந்தப் பதிவில் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Also Read… கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:

Also Read… வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது