Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!

Keerthiswaran About Mamitha Baiju: தமிழ் சினிமாவில் பேமஸ் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் 4வது உருவாகியுள்ள படம்தான் டியூட். இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவரை இப்படத்தில் நடிக்கவைக்க காரணம் பற்றி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Oct 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் உதவி இயக்குநராக இருந்து தற்போது ஒரு படத்தை இயக்கியிருப்பவர்தான் கீர்த்தீஸ்வரன் (Keerthiswaran). இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள திரைப்படம் டியூட் (Dude). இந்த படத்தின் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். மமிதா பைஜூ ஏற்கனவே தமிழில் ரிபெல் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனுடன் இந்த டியூட் படத்தில் நடித்திருக்கிறார். இந்த டியூட் படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், இந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன், நடிகை மமிதா பைஜூவை இப்படத்தில் நடிக்க காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குறட்டையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ

மமிதா பைஜூ குறித்து பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன் :

அந்த நேர்காணலில் டியூட் படத்தின் கதைக்களம் பற்றி பல்வேறு விஷயங்களை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், “நான் மமிதா பைஜுவி சந்தித்து கதை சொன்னபோது, அவரின் பிரேமலு திரைப்படம் வெளியாகவில்லை. அதற்கு முன்னே இந்த டியூட் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். உண்மையிலே அவரின் சூப்பர் சரண்யா திரைப்படத்தை பார்த்தபிறகுதான், டியூட் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என தேர்ந்தெடுத்தேன்.

இதையும் படிங்க : எனது மகன் அந்த நடிகரின் தீவிர ரசிகன்.. பிக்பாஸ் மேடையில் ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!

மேலும் இந்த டியூட் திரைப்படத்தின் கதைக்குள் மமிதா பைஜூ வந்தவுடன், ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்தாலே எப்படியிருக்கும் என்பதை போல, படம் மாறியிருப்பதை நான் உணர்ந்தேன். இந்த படத்தின் கதையை ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதியநிலையில், பிரதீப் ரங்கநாதன் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாகவே பொருந்தினார்” என்று இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அந்த நேர்காணலில் டியூட் படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

டியூட் படத்தின் 3வது பாடல் தொடர்பான பதிவை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன் :

இந்த டியூட் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த படம் வரும் 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.