Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குறட்டையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்று முதல் நாள் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் முதல் நாளே போட்டியாளர்கள் இடையே சண்டை ஏற்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

குறட்டையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2025 16:06 PM IST

தமிழ் ரசிகர்கள்  மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த இந்த 2025-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்களின் பட்டியளைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் போட்டியில் உள்ள பலர் விஜய் தொலைக்காட்சியில் வேலை செய்தவர்கள் என்பதால் இது பிக்பாஸ் இல்ல விஜய் டிவி பிரபலங்களில் ஷோ என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய அன்றே போட்டியாளர்களிடையே சலசப்பு தொடங்கியது. இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளையே சண்டைய ஆரம்பிச்சுட்டீங்களா என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று முதல் நாளிற்கான முதல் புரோமோ வீடியோவைப் பார்க்கும் போது எரியுற நெருப்பில் எண்ணையை ஊற்வது போல பிக்பாஸ் ஒரு டாஸ்கை வழங்கியுள்ளார். இது போட்டியாளர்களை மேலும் பிளவுபடுத்தி சண்டையை அதிகம் தூண்டும் விதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும் போது விரிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் குறட்டை விட்டது என்று பிக்பாஸ் வீட்டில் சண்டை:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் நாளிற்கன மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் திவாகர் மற்றும் பிரவீன் ராஜ் தேவ் இருவருக்கும் இடையே யார் குறட்டை விட்டது என்று சண்டை ஏற்படுகிறது.

இதில் இடையில் வரும் கெமியிடமும் திவாகர் சண்டையிடுவது அந்த புரோமோ வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் டைட்டில் விவகாரம் – நீதிமன்றம் கொடுத்த மாஸ் உத்தரவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நீங்க என் அப்பா மாதிரி என்று கூறிய துருவ் விக்ரம்… நெகிழ்ந்த மாரி செல்வராஜ்