Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓடிடியில் வெளியாகியுள்ள மதராஸி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Madharaasi Movie OTT Review: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது மதராஸி. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மதராஸி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தைப் பார்ப்போம்.

ஓடிடியில் வெளியாகியுள்ள மதராஸி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
மதராஸிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2025 20:32 PM IST

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் மதராஸி (Madharaasi). இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இந்தப் படம் வருவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் கூட்டணி குறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தில் பிசியாக இருந்ததால் இந்தப் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் படம் தமிழ் சினிமாவில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் சிலர் இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்து இருந்தார். மேலும் நடிகர்கள் வித்யூத் ஜம்வால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் வில்லனாக நடித்து இருந்தனர். மேலும் நடிகர்கள் பிஜூ மேனன் மற்றும் விக்ராந்த் இருவரும் என்ஐஏ அதிகாரிகளாக நடித்து இருந்தனர். மேலும் இவர்கள் அப்பா மகனாகவும் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கதை என்ன?

காதல் தோல்வி அடைந்ததால் தற்கொலைக்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் ஒவ்வொரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும் அவர் தப்பித்து விடுகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க என்ஐஏ அதிகாரிகளாக உள்ள பிஜூ மேனன் மற்றும் விக்ராந்த் குழு முயற்சித்து வருகின்றது. அப்போது ஒரு விபத்தில் பிஜூ மேனன் காயமடைய சிவகார்த்திகேயன் தங்கியிருந்த அதே மருத்துமனையில் அவரும் அனுமதிக்கப்படுகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் பிஜூ மேனனுடன் பழக முயற்சி செய்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் தங்களது வேலைக்காக பிஜூ மேனன் சிவகார்த்திகேயனை பயன்படுத்துகிறார். இதனால் சிவகார்த்திகேயனுக்கும் அவரது காதலி ருக்மினி வசந்திற்கும் பிரச்னை ஏற்படுகின்றது. அதிலிருந்து சிவகார்த்திகேயன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… காதலே காதலே தனிப்பெரும் துணையே – 7 ஆண்டுகளை நிறைவு செய்தது 96 படம்

மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் இத்தனை வசதிகளா? வைரலாகும் வீடியோ!