Nithya Menen: முதலில் இட்லி கடை படத்தில் நான் நடிக்க ஒத்துக்கல.. – நித்யா மேனன்!
Nithya Menens Idli Kadai Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்யா மேனன். இவரின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் இட்லி கடை. தனுஷின் இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளாதது குறித்து ஓபனாக நடிகை நித்யா மேனன் பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்யா மேனன் (Nithya Menon). இவரின் முன்னணி நடிப்பில் மட்டும் இந்த 2025ல் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகனுடன் (Ravi Mohan) காதலிக்க நேரமில்லை, விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) தலைவன் தலைவி மற்றும் தனுஷின் (Dhanush) இட்லி கடை (Idli kadai) போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியான தலைவன் தலைவி திரைப்படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தமிழில் நடித்திருந்த படம்தான் இட்லி கடை.
இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக நடிகை நித்யா மேனன், “கயல்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டதற்கு காரணம் பற்றி அவர் கூறியுள்ளார்.




இதையும் படிங்க : இட்லி கடைக்கு கிடைக்கும் வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
இட்லி கடை படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ள காரணம்
அந்த நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன், “ஆரம்பத்தில் தனுஷ் இட்லி கடை படத்தில் நடிக்க கூப்பிடும்போது, நடிக்க ஒத்துக்கல. ஏனென்றால், எனக்கு சரியான நேரமும் இல்ல, என்ன பண்ணனும் என்றே தெரியல. அதனால் தனுஷிடம் முதலில் நடிக்கவில்லை எனக்கூறிவிட்டேன். பின் எனக்கு தேசிய விருது அறிவித்திருந்த நிலையில், கொஞ்சம் டைம் கிடைச்சுது.
இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு காந்தாரா படக்குழு கோரிக்கை!
அப்போது தனுஷ் மீண்டும் என்னிடம் கேட்டாரு, அப்போது நான் நினைத்தேன், இந்த படம் நாம் தான் பண்ணனும் போல, மீண்டும் நம்மக்கிடையே வருது. அதனால இந்த படத்தின் நடிப்பதற்கு ஒத்துக்கிட்டேன். அப்படியே புரோட்டா கடை மற்றும் இட்லி கடை என இந்த இரு படங்களில் மாறி மாறி நடிச்சேன்” என நடிகை நித்யா மேனன் ஓபனாக பேசியிருந்தார்.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
The critics rave about #IdliKadai ❤️
Praise from all centers for @dhanushkraja‘s directorial and acting brilliance🤩@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3… pic.twitter.com/H5G50A7zSA
— DawnPictures (@DawnPicturesOff) October 2, 2025
தனுஷின் இட்லி கடை படமானது தற்போது மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றுவருகிறது. தமிழ் சினிமாவில் தனுஷின் நடிப்பில் இந்த படமானது எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது.