Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இட்லி கடை? எக்ஸ் விமர்சனம் இதோ

Idli Kadai Movie X Review: நடிகர் தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி நடித்து இருந்ததால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இட்லி கடை? எக்ஸ் விமர்சனம் இதோ
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Oct 2025 11:16 AM IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இன்று அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி உள்ளார். இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகும், மேலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் 4-வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்த இட்லி கடை படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

இட்லி கடை படம் ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் படம். இது நிச்சயமாகா கிராமபுர மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும். சாதாரண கதை மற்றும் திரைக்கதையுடன் இயக்குநர் தனுஷ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சி, காமெடி, காதல், அதிரடி ஆகியவற்றின் சரியான கலவையாக இந்தப் படம் உள்ளது.

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

இட்லிக்கடை முருகன் வேடத்தில் தனுஷ் எளிமையாக நடித்துள்ளார். அருண் விஜய் நேர்த்தியான நடிப்பு. ராஜ்கிரண், நித்யா குட். இசை & பாடல்கள் அருமை. சத்யராஜ் குடும்பப் பகுதிகள் தனித்து நிற்கின்றன. டெம்ப்ளேட் கதை, மெலோடிராமாடிக் நரகம். நேர்த்தியான கிராமப்புற ஃபேமிலி ட்ராமாவாக உள்ளது.

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும் போது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனால் படத்தில் அந்த கட்சியை பார்க்கும் போதே ஏன் அது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இருந்தது என்பதை உணர்ந்தேன். அது ஒரு சிலிர்ப்பூட்டும் தருணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

இட்லி கடை படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க எமோஷ்னல் மற்றும் நெச்சை வருடும் காட்சிகளாக உள்ளது. தனுஷ் நடிகராகவும் இயக்குநராகவும் தனது சிறப்பான வேலையை செய்துள்ளார். இசையில் ஜிவி பிரகாஷ் குமார் தனது சிறப்பான பணியை செய்துள்ளார்.

Also Read… இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

நடிகர் தனுஷை விட இயக்குநர் தனுஷை விட எழுத்தாளர் தனுஷ் மிகவும் சிறப்பு. முதல் காட்சி முதல் இடைவேளை காட்சி வரை மிக சிறப்பான திரைக்கதையை தனுஷ் அமைத்துள்ளார். மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பானதாக உள்ளது.

இட்லி கடை படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

இட்லி கடை படம் மனதிற்கு மிகவும் நெறுக்கமான எமோஷ்னலான படமாக உள்ளது. படத்தின் கதை மற்றும் இயக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அருண் விஜயின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

Also Read… சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!