ஒவ்வொரு வீட்டிற்கும் ஏற்றவாறு இதயத்திலிருந்து வரும் ஒரு கதை – நாளை திரையரங்குகளில் மாஸாக வெளியாக உள்ளது இட்லி கடை படம்
Idli Kadai Movie Poster : இட்லி கடை படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இட்லி கடை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தனது 52-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகும் 4-வது படம் ஆகும். அதன்படி தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் இயக்குநர் தனுஷ் என்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது திறமையை தனுஷ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்துக்கொண்டே இருக்கின்றார். பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஹாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பக்கா ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நாளை அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக தற்போது நடைப்பெற்று வருகின்றது.




குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாக உள்ள இட்லி கடை படம்:
இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள நிலையில் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஒரு சிறப்பான வில்லன் கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியகா நடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தலைவன் தலைவி படத்திலும் ஹோட்டலை மையப்படுத்திய கதையாக இருந்த நிலையில் இந்த இட்லி கடைப் படமும் ஹோட்டலை மையமாக வைத்தே உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரகனி மற்றும் பார்த்திபன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Also Read… நீங்க இப்படி பண்ணிருக்கீங்களா… கவனம் பெறும் பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியின் புது புரோமோ
இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
A story from the heart, made for every home ✨#IdliKadai நாளை முதல்❤️
Grab your tickets now ♨️🍿@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3 @kavya_sriram… pic.twitter.com/Sg9mgd6izi
— Wunderbar Films (@wunderbarfilms) September 30, 2025