டாப் குக்கு டூப்பு குக்கு சீசன் 2 நிகழ்ச்சியில் இன்று எலிமினேட் ஆனது இவர் தான்!
Top Cooku Dupe Cooku season 2 : சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சமையல் போட்டியை காமெடி கலந்து கொடுப்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலனா சேனல் என்றால் அது சன் டிவிதான். அப்படி சீரியல் நியல்ட்டி ஷோ என்று தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு (Top Cooku Dupe Cooku season 2) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. சமையல் மற்றும் காமெடி என இரண்டையும் இணைத்து வெளியாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு வரும் போது இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலதான் இருக்கும் அவர்களை இவர்கள் காப்பி அடித்து செய்கிறார்கள் என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது என்று ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது.
அதன்படி முதல் சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் சிறப்பான சமையலை செய்து அசத்தினர். மேலும் டூப்பு குக்குகளாக வந்தவர்கள் தங்களது காமெடி திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் சீசனின் நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா சிவக்குமார் இருவரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி பரிசுத் தொகையான 20 லட்சம் ரூபாய் இவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.




இரண்டாவதாக டாப்பு குக்கு டூப்பு குக்கு 2-வில் இருந்து வெளியேறிய கிரண்:
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு முதல் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களாக பெசன் ரவி, டெல்னா டேவிஸ், பிரீத்தா, பிரியங்கா, ஷிவானி, டிஎஸ்ஆர், வாகீசன், கிரண் மற்றும் ரோபோ சங்கர் என 9 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் முதலாவதாக ரோபோ சங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் உயிரிழப்பதற்கு முன் கலந்துகொண்ட கடைசி நியால்டி ஷோ இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியாளராக இன்று நடிகை கிரண் வெளியேற்றப்பட்டுள்ளார்.
Also Read… கவினின் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
டாப்பு குக்கு டூப்பு குக்கு 2 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Endhan uyir thozhiyae… Kann thirandhu paarthaai ❤️
TOP COOKU DUPE COOKU – SEASON 2 | FROM AUG 17 | 2 PM#SunTV #TopCookuDupeCooku #TopCookuDupeCookuOnSunTV #Kiran #RenduDhanTrendu pic.twitter.com/Mb7yjjZTgc
— Sun TV (@SunTV) August 16, 2025
Also Read… நடிகர் தினேஷின் பர்த்டே ஸ்பெஷல் – வேட்டுவம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பா ரஞ்சித்