STR49: சிலம்பரசனின் ‘STR49’ படத்தின் புரோமோ வீடியோ – ரிலீஸ் எப்போது தெரியுமா?
STR49 Movie Promo Video Update: நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் தக் லைஃப் படத்தை அடுத்தாக, மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம்தான் STR49. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ள நிலையில், ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், சிலம்பரசனின் ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai part 2). இந்த படத்தில் விஜய் சேதுபதி (Vijay sethupathi) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யாவின் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தை இவர் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் கடந்த 2025 ஜூன் மாதத்தில் நடைபெற்றிருந்தது. அதை தொடர்ந்து வெற்றிமாறன் – சிலம்பரசன் STR49 பட காம்போ உறுதியானது.
இந்நிலையில் வெற்றிமாறனின் பிறந்தநாளில் இப்படமானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த, இப்படத்தின் ப்ரோமோ வீடியோ எப்போது வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.




இதையும் படிங்க: திரையரங்குகளில் ரூ100 கோடி வசூல்.. ஓடிடியில் எப்போது வெளியாகிறது சிவகார்த்திகேயனின் மதராஸி?
சிலம்பரசனின் STR49 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ, வரும் 2025 அக்டோபர் 4ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
STR49 பட ப்ரோமோ ரிலீஸ் குறித்து கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Mark your calendars! 🗓
The most awaited combo will be revealed in the promo.
Promo drops on Oct 4th 🔥@SilambarasanTR_ @VetriMaaran @AtmanCineArts #STR49 #VetriMaaran #Simbu#VCreations47 pic.twitter.com/jx9hJCLn7G— Kalaippuli S Thanu (@theVcreations) September 26, 2025
STR49 படத்தின் இசையமைப்பாளர் யார்?
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் இந்த STR49 திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயராகிவருகிறது. இந்த படத்தை வீ க்ரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். STR49 திரைப்படமானது, தனுஷின் வட சென்னை படத்தின் பின்னணி கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் டீசர் அப்டேட் இதோ!
இப்படத்திற்கு ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் என கூறப்பட்டிருந்த நிலையில், வேறு இசையமைப்பாளர் இசையமைப்பதாக இணையதளத்தில் தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி சிலம்பரசனின் STR49 படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை எந்த படங்களுக்கும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
STR49 படத்தின் கதாநாயகி யார்?
சிலம்பரசனின் இந்த STR49 படத்தில் நடிகை யார் என்பது குறித்த தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. STR49 படத்தின் ப்ரோமோ வீடியோவுடன் அனைத்தும் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.