Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தாய்லாந்திற்கு சிலம்பரசன் – லோகேஷ் கனகராஜ் பயணம் – காரணம் என்ன தெரியுமா?

Lokesh Kanagaraj And Silambarasan: கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாகவும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், தாய்லாந்தில் இவர் மற்றும் சிலம்பரசன் இருவரும் ஒன்றாக இருக்கின்றனர் என கூறப்படுகிறது. என்ன காரணம் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

தாய்லாந்திற்கு சிலம்பரசன் – லோகேஷ் கனகராஜ் பயணம் – காரணம் என்ன தெரியுமா?
சிலம்பரசன் மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 25 Sep 2025 22:18 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், பாடகர், தயாரிப்பாளர் போன்ற பல்வேறு பணிகளை செய்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் வெளியானது. இப்படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியில் முடிந்தது . அந்த வகையில், தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) STR49  இணைந்துள்ளார். இந்த படமானது வட சென்னை படத்தின் கதைக்களத்தை கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றுவதற்காக சிலம்பரசன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கும் வரும் 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது, சிலம்பரசன் தாய்லாந்தில் இருக்கிறாராம். அவருடன் தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் (Lokesh Kanakaraaj) இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதா ? அல்லது என்ன காரணம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சக்தித் திருமகன் படம் அந்த ஹீரோ பண்ணிருக்கவேண்டியது.. இயக்குநர் அருண் பிரபு சொன்ன நடிகர் யார் தெரியுமா?

தாய்லாந்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிலம்பரசன் :

நடிகர் சிலம்பரசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் தாய்லாந்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களின் படங்களுக்காக உடல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தாய்லாந்து சென்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ள நிலையில், அதற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறமையை மேலும் அதிகரிப்பதற்காக தாய்லாந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரு தரமான சம்பவம் இருக்கு… இட்லி கடை குறித்து பேசிய அருண் விஜய்

மேலும் நடிகர் சிலம்பரசன், வெற்றிமாறனுடனான STR49 படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக தாய்லாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி படத்தின் ப்ரோமோ வீடியோ பதிவு :

லோகேஷ் கனகராஜின் ஹீரோவாக அறிமுகமாகும் படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக படங்களை இயக்கியதை அடுத்ததாக, ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை, இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கவுள்ளாராம். இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக, ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.