Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கலைமாமணி விருதை வென்ற சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்த லோகா படக்குழு!

Dance Master Sandy: தமிழக அரசு சார்பில் இன்று கலைமாமணி விருது இன்று சினிமா திரையுலகில் இருப்பவர்களுக்கு அறிவித்தது. அதன்படி சினிமாவில் இருக்கும் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கும் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து லோகா படக்குழு பதிவிட்டுள்ளது.

கலைமாமணி விருதை வென்ற சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்த லோகா படக்குழு!
சாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Sep 2025 18:14 PM IST

தமிழ் திரையுலகில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் வலம் வருகிறார் சாண்டி (Dance Master Sandy). அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் வில்லனாக மிரட்டினார். இதில் சாண்டியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரட்டுவிட்டனர் என்றே கூறலாம். அதனைத் தொடர்ந்து சாண்டி பலப் படங்களில் கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து நடன இயக்குநராக பணியாற்றி வரும் சாண்டிக்கு தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் வருகின்றது. அதிலும் குறிப்பாக வில்லன் கதாப்பாத்திரங்கள் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றது. அதன்படி சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார் நடிகர் சாண்டி.

குறிப்பாக மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் நடிகர் சாண்டிக்கும் சூப்பர் ஹீரோ பவர் வருகிறது. ஆனால் அவர் வில்லனாக எப்படி பயன்படுத்தினார் என்று திரையருங்குகளில் பார்த்தவர்கள் சாண்டியின் நடிப்பைப் பாராட்டினர். அதன்படி தொடர்ந்து சாண்டி நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மதிப்புமிக்க கலைமாமணி விருதை வென்ற நாச்சியப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:

இந்த நிலையில் இன்று தமிழக அரசு டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு கலைமாமணி விருதை அறிவித்தது. அதற்கு லோகா படக்குழு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டு இருந்தது. அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது, மதிப்புமிக்க கலைமாமணி விருதை வென்ற நாச்சியப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தது. லோகா படத்தில் சாண்டியின் கதாப்பாத்திர பெயர் நாச்சியப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது – பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டி

லோகா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு – வைரலாகும் போட்டோஸ்